தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவர், சாலையில் நிர்வாணமாக சடலமாகக் கிடந்துள்ளார். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துணை ஆணையர் பிரகாஷ் ரெட்டி, காவல் உதவி ஆணையர் ரவீந்தர் ரெட்டி ஆகியோர் அப்பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இது குறித்து காவல் உதவி ஆணையர் ரவீந்தர் ரெட்டி தெரிவிக்கையில், "இளம்பெண் நிர்வாண கோலத்தில் உள்ளதால் பாலியல் வன்பண்ர்வு நடந்திருக்க வாய்ப்புள்ளது. மேலும், அவரின் தலையில் பலமாகத் தாக்கி கொடூர கொலைசெய்துள்ளனர். அப்பெண் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளைத் தனிப்படை அமைத்து தேடிவருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: மெட்ரோ ரயில் பணியில் மணல் சரிவு - இரண்டு லட்ச ரூபாய் பொருட்கள் சேதம்