ETV Bharat / bharat

டெல்லி தேர்தல்: இந்தியா மீதான கருத்தாக்கத்தின் தீர்ப்பு!

"உலகமே உடல், டெல்லி அதன் ஆன்மா" என்றார் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல உருது கவிஞர் மிர்சா காலிப். டெல்லி ஒரு இடமாகவும், ஒரு கற்பனையாகவும் எப்போதும் முக்கியத்துவத்துடன் இருக்கும் என்பதை தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்தவர் அவர். அவரது அர்த்தம் பொதிந்த வரிகள் எந்த அளவுக்கு நிதர்சனமானவை என்பதை தற்போதைய டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல், மக்களுக்கு உணர்த்துவதாக இருக்கிறது.

Delhi election 2020
Delhi election 2020
author img

By

Published : Feb 8, 2020, 3:07 PM IST

சமூக – அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெறும் இந்தத் தேர்தல், டெல்லி அளவிலும், தேசிய அளவிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கணிக்க முடியாததாக இருக்கிறது.

நீண்ட காலமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்துவருவது ஒருபுறம் இருக்க, குடியுரிமை திருத்தச் சட்டமும் மக்களை போராடுவதற்காக வீதியில் தள்ளியுள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளூர் பிரச்னைகளை மையமாகக் கொண்டது என முன்னிறுத்தப்பட்டாலும், தேர்தல் முடிவுகள் நாட்டு மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கும்.

டெல்லி தேர்தல் இம்முறை கூடுதல் முக்கியத்துவத்தைப் பெற்றிருப்பது ஏன்?

டெல்லியில் தேர்தல்கள் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தவைதான். ஏனெனில் நாட்டின் தலைநகரான டெல்லி, அரசியலின் மையமாக இருக்கிறது. அதோடு, ஊடகங்களுக்கு மிகவும் நெருக்கமான களமாகவும் டெல்லி திகழ்கிறது.

டெல்லி தேர்தல் வெறும் குறியீடு மட்டுமல்ல. இந்திய மக்கள் வாக்களிப்பதில் எவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள், மாற்று அரசியலுக்கான வாய்ப்புகள் எவ்வாறு இருக்கின்றன, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தக்கூடியது டெல்லி தேர்தல்.

Delhi election 2020
தலைநகர் யாருக்கு

மக்களவைத் தேர்தலையும், சட்டப்பேரவைத் தேர்தலையும் பிரித்துப் பார்த்து வாக்களிக்கக் கூடியவர்கள் டெல்லி வாக்காளர்கள் என அடிக்கடி கூறப்படுவதுண்டு.

வாக்காளர்களின் விருப்பங்கள் இங்கு தேர்தலுக்குத் தேர்தல் மாறுபடும். அதாவது, தேசிய பிரச்னைகளையும் மாநில பிரச்னைகளும் தனித்தனியாக பார்ப்பவர்கள் அவர்கள்.

டெல்லி மக்களின் இந்த எண்ண ஓட்டம், ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு சாதகமாக இருந்திருக்கிறது. ஏனெனில், அக்கட்சி உள்ளூர் பிரச்னைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது. தனது அரசின் சாதனைகளை முன்வைத்தே அர்விந்த் கெஜ்ரிவால் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

டெல்லி மக்களின் இந்த மனநிலையை மாற்றுவதில் பாஜக தீவிரம் காட்டியது. மத்திய அரசு எவ்வாறு சிறப்பான செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பதை பாஜக வாக்காளர்களுக்குத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தது.

அதோடு, ஆம் ஆத்மியும், காங்கிரசும் ‘தேசிய நலன்களில்’ சமரசம் செய்து கொள்வதாகவும் பாஜக குற்றம் சாட்டியது. மேலும், மத்தியிலும் டெல்லியிலும் ஒரே கட்சியின் ஆட்சி இருக்குமானால் தடையற்ற வளர்ச்சியை டெல்லி பெறும் என்ற கருத்தையும் பாஜக தொடர்ந்து முன்வைத்தது.

Delhi election 2020
உள் துறை அமைச்சர் அமித் ஷா

அடையாள அரசியல் இல்லை; வளர்ச்சி அரசியல் மட்டுமே:

மாற்று அரசியலை முன்வைப்பவர்கள் முன்னுள்ள மிகப்பெரிய சவால், தேர்தல் அரசியல் என்பது ஒரு எண்ணிக்கை விளையாட்டு என்பதுதான். ஆட்டத்தின் முடிவில் யார் எந்த எண்ணிக்கையை பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

வளர்ச்சி என்பது ஒருவகையான மாயச் சொல். பல்வேறாக பிரிந்துள்ள மக்களை ஒருங்கிணைக்க இந்த சொல் அவசியமானதாக இருக்கிறது. ஏழ்மையை ஒழிப்போம், எல்லோருமாகச் சேர்ந்து எல்லோருக்குமான வளர்ச்சியை எட்டுவோம் போன்ற முழக்கங்கள் இந்த கருத்தைத்தான் பிரதிபலிக்கின்றன.

இந்திய அரசியலை பாழ்படுத்தும் மூன்று முக்கிய தீமைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான சிவில் சமூகத்தின் தீவிர முயற்சியின் காரணமாக உருவான கட்சி ஆம் ஆத்மி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

Delhi election 2020
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

அந்த மூன்று என்னென்ன?:

பணபலம், ஆள்பலம், குடும்ப அரசியல் எனும் மூன்று தீமைகளை அரசியலில் இருந்து ஒழிக்கும் நோக்கத்துடன் தொடக்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சி.

புதிதாக தொடக்கப்பட்ட அக்கட்சிக்கு 2010ஆம் ஆண்டில் கிடைத்த அற்புதமான வெற்றி, இந்திய தேர்தல் அரசியல் பணத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற நிலையை மாற்றி, அது அர்ப்பணிப்பு உணர்வை அடிப்படையாகக் கொண்டது என்ற நிலையை உருவாக்கியது.

சேவையை அடிப்படையாகக் கொண்ட அரசியலை ஆம் ஆத்மி முன்வைத்தது. அதில், அந்தக் கட்சிக்கு எந்த அளவு வெற்றி கிடைத்தது அல்லது கிடைக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், இந்திய அரசியலில் ஒரு முக்கிய மாற்றத்திற்கான விதையை ஆம் ஆத்மி தூவியுள்ளது.

இதில், முக்கியம் என்னவென்றால், தனது அரசின் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளின் மூலம், சமூகத்துடன் ஒரு கூட்டணியை ஆம் ஆத்மி வெற்றிகரமாக நிறுவியுள்ளது.

சமூகத்தில் காணப்படும் பல்வேறு பிளவுகளைத் தாண்டி வண்ணமயமான ஒரு கூட்டணியை அது உருவாக்கியுள்ளது. அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்கும் வழக்கமான ஜனரஞ்சக அரசியலுக்கு அப்பாற்பட்டது அது.

Delhi election 2020
அரவிந்த் கெஜ்ரிவால்

சமூக விஞ்ஞானிகளான அமித் அஹுஜாவும், பிரதீப் சிப்பெரும் பரந்துபட்ட வாக்காளர்களை மூன்று சமூகக் குழுக்களாக அடையாளம் காண்கிறார்கள்.

வாக்களிப்பதை ‘உரிமை’ சார்ந்த ஒன்றாக கருதுபவர்கள் ஒரு வகை. சமூக பொருளாதார அடுக்கில் இவர்கள் கீழ் நிலையில் இருப்பவர்கள், அரசின் வளங்களைப் பெறுவதற்கான கருவியாக தேர்தலை கருதுபவர்கள் ஒரு வகை.

இவை இரண்டுக்கும் இடையே ஒரு பிரிவு இருக்கிறது. அவர்கள் தேர்தலை ஒரு சமூகக் கடமையாக கருதக்கூடியவர்கள்.

இந்த மூன்று பிரிவுகளைக் கொண்ட தேர்தல் அரசியலில் ஆம் ஆத்மி எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்க முடியும் என்பதுதான் முக்கியமான கேள்வி.

மருத்துவம், கல்வி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் தங்கள் அரசு செய்த சாதனைகளின் அடிப்படையில் ஆம் ஆத்மி வாக்கு கோருகிறது.

அடையாளத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கக்கூடிய, ஜனரஞ்சகத்தை முன்னிருத்தக் கூடிய அரசியலுக்கு மத்தியில், தனது இந்த அணுகுமுறையுடன் ஆம் ஆத்மியால் வெற்றியை தொடர முடியுமா என்ற கேள்வி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Delhi election 2020
அரவிந்த் கெஜ்ரிவால்

ஷாகீன் பாக், ஜேஎன்யு, ஜாமியா: ‘மையப்படுத்துதலுக்கான’ மேடை அமைக்கப்படுகிறதா?

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அரசியல் கொந்தளிப்புக்கிடையே இம்முறை டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

ஜேஎன்யு-வில் கல்வி கட்டண உயர்வு எதிர்ப்பு இயக்கம் முதல் ஷாஹீன் பாக்கில் சிஏஏ, என்ஆர்சி-க்கு எதிரான போராட்டங்கள் வரை அனைத்தும் டெல்லியை மையமாகக் கொண்டே நடக்கின்றன.

சிஏஏ மற்றும் என்ஆர்சி-க்கு எதிரான போராட்டங்களில் இருந்தும், போராடுபவர்கள் சிறு சிறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்ற பாஜகவின் விமர்சனத்தில் இருந்தும் தள்ளி நிற்கவே முயல்கிறது ஆம் ஆத்மி.

எனினும், இதனை பிரதான பிரச்னையாக மாற்றப் பார்க்கிறது பாஜக. சிஏஏ மற்றும் என்ஆர்சி-க்கு எதிராக போராடுபவர்களை தேச விரோதிகள் என வர்ணிக்கிறது அக்கட்சி.

வளர்ச்சி அரசியலை மேற்கொள்ளாத நிலையில், அதில் இருந்து மக்களை திசை திருப்பும் நோக்கிலேயே சிஏஏ-என்ஆர்சி போன்றவற்றை பாஜக கொண்டுவருவதாக ஆம் ஆத்மி விமர்சிக்கிறது.

எனினும், தேர்தல் வியூகங்களைத் தாண்டி, இதற்கு வேறு அரசியல் முக்கியத்துவம் இருக்கிறதா?

Delhi election 2020
சிஏஏ போராட்டம்

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, பாலாகோட் வான் தாக்குதல் முதல், தற்போதைய ஷாகீன் பாக் போராட்டங்கள் வரை பல்வேறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் ஆம் ஆத்மி எத்தகைய கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறது என்பதை கவனித்தால் அது இடதுசாரியாகவும் இல்லாமல், வலதுசாரியாகவும் இல்லாமல், 'மையவாத' நிலையை கொண்டிருப்பதை கவனிக்க முடியும்.

பாஜக முன்வைக்கும் தீவிர தேசியவாதத்தில் இருந்தும், ‘இடதுசாரி’ கட்சிகள் முன்வைக்கும் கடும் விமர்சனங்களில் இருந்தும் விலகி இருப்பதன் மூலம், காங்கிரசின் அழிவால் இந்திய அரசியலில் ஏற்பட்டுவிட்ட வெற்றிடத்தை நிரப்ப ஆம் ஆத்மி முயல்கிறது.

டெல்லியில் நடைபெற்ற கடந்த சில சட்டப்பேரவைத் தேர்தல்களில், பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்றதன் மூலம் (கடந்த நான்கு தேர்தல்களிலும் 30-35% க்கு இடையில்) பாஜக டெல்லியில் வலுவுடனே இருக்கிறது.

Delhi election 2020
கட்சி உறுப்பினர் வீட்டில் உணவு அருந்தும் அமித் ஷா

எனினும், காங்கிரஸ் கட்சி மோசமான வீழ்ச்சியை சந்தித்துவருகிறது. 2003 தேர்தலில் 48.1 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ், 2015 ல் 9.7 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. மக்கள் செல்வாக்கு மிக்கத் தலைவர்களை முன்னிறுத்தாமல், காங்கிரஸ் கட்சி மந்தமான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகிறது. இதன் காரணமாக, அக்கட்சியின் வாக்குகளை ஆம் ஆத்மி மீண்டும் அறுவடை செய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகளை பாஜக மேற்கொண்டுள்ள நிலையில், சிறுபான்மை வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்குப் பதில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்ல வாய்பபு அதிகரித்துள்ளது. ஏனெனில், தேர்தல் களத்தில் காங்கிரஸ் மிகுந்த பலவீனத்துடனேயே காட்சியளிக்கறது.

தேர்தல் முடிவுகளின் முக்கியத்துவம் பன்முக முக்கியத்துவம்:

இம்மாதம் 11ஆம் தேதியன்று வெளியாகவுள்ள டெல்லி தேர்தல் முடிவுகள், பல வகைகளில் தேசிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும். குறிப்பாக, இந்திய அரசியல் கட்சிகளின் அரசியல் மொழி மீது இது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

Delhi election 2020
பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள்

வாக்காளர்களின் முன்னுரிமை எவ்வாறு இருக்கிறது என்பதையும், வெற்றி பெறப்போவது அடையாள அரசியலா அல்லது வளர்ச்சி அரசியலா என்பதையும் இந்தத் தேர்தல் முடிவுகள் தீர்மானமாக சொல்லிவிடும்.

‘பிரதமர் பதவிக்கு மோடி, டெல்லி முதலமைச்சர் பதவிக்கு அரவிந்த்’ என்பதாக டெல்லி வாக்காளர்களில் பெரும் பகுதியினர் சில நாள்களுக்கு முன்பு வரைகூட கூறியதில் நிறைய அர்த்தம் இருந்தது. எவ்வாறாயினும், இந்தத் தேர்தல் முடிவுகள் இந்திய கூட்டாட்சியின் எதிர்கால நிலையை கணிசமாக பிரதிபலிக்கும்.

இதையும் படிங்க:தலைநகரம் யாருக்கு? டெல்லி தேர்தல் குறித்து அலசும் ஈடிவி பாரத்

Intro:Body:

டெல்லி சட்டமன்றத் தேர்தல்

இந்தியா எனும் கருத்தாக்கத்தின் மீதான தீர்ப்பு

  •          

    கெளஸ்துப் தேகா

"உலகமே உடல், டெல்லி அதன் ஆன்மா" என்றார் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல உருது கவிஞர் மிர்சா காலிப். டெல்லி ஒரு இடமாகவும், ஒரு கற்பனையாகவும் எப்போதும் முக்கியத்துவத்துடன் இருக்கும் என்பதை தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்தவர் அவர். அவரது அர்த்தம் பொதிந்த வரிகள் எந்த அளவுக்கு நிதர்சனமானவை என்பதை தற்போதைய டெல்லி சட்டமன்றத் தேர்தல், மக்களுக்கு உணர்த்துவதாக இருக்கிறது. 

சமூக – அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு நடைபெறும் இந்தத் தேர்தல், டெல்லி அளவிலும், தேசிய அளவிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கணிக்க முடியாததாக இருக்கிறது. நீண்ட காலமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருவது ஒருபுறம் இருக்க, குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களை போராடுவதற்காக வீதியில் தள்ளி இருக்கிறது. 

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளூர் பிரச்னைகளை மையமாகக் கொண்டது என முன்னிறுத்தப்பட்டாலும், தேர்தல் முடிவுகள் நாட்டு மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கும்.

டெல்லி தேர்தல் இம்முறை கூடுதல் முக்கியத்துவத்தைப் பெற்றிருப்பது ஏன்?:

டெல்லியில் தேர்தல்கள் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தவைதான். ஏனெனில் நாட்டின் தலைநகரான டெல்லி, அரசியலின் மையமாக இருக்கிறது. அதோடு,ஊடகங்களுக்கு மிகவும் நெருக்கமான களமாகவும் டெல்லி திகழ்கிறது. 

டெல்லி தேர்தல் வெறும் குறியீடு மட்டுமல்ல. இந்திய மக்கள் வாக்களிப்பதில் எவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள், மாற்று அரசியலுக்கான வாய்ப்புகள் எவ்வாறு இருக்கின்றன, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தக்கூடியது அது. 

மக்களவைத் தேர்தலையும், சட்டப்பேரவைத் தேர்தலையும் பிரித்துப் பார்த்து வாக்களிக்கக் கூடியவர்கள் டெல்லி வாக்காளர்கள் என அடிக்கடி கூறப்படுவதுண்டு. வாக்காளர்களின் விருப்பங்கள் இங்கு தேர்தலுக்குத் தேர்தல் மாறுபடும். அதாவது, தேசிய பிரச்னைகளையும் மாநில பிரச்னைகளும் தனித்தனியாக பார்ப்பவர்கள் அவர்கள். 

டெல்லி மக்களின் இந்த எண்ண ஓட்டம், ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு சாதகமாக இருந்திருக்கிறது. ஏனெனில், அக்கட்சி உள்ளூர் பிரச்னைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது. தனது அரசின் சாதனைகளை முன்வைத்தே அர்விந்த் கெஜ்ரிவால் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

டெல்லி மக்களின் இந்த மனநிலையை மாற்றுவதில் பாஜக தீவிரம் காட்டியது. மத்திய அரசு எவ்வாறு சிறப்பான செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பதை அது வாக்காளர்களுக்கு திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தது. அதோடு, ஆம் ஆத்மியும், காங்கிரசும் ‘தேசிய நலன்களில்’ சமரசம் செய்து கொள்வதாகவும் அது குற்றம் சாட்டியது. மேலும், மத்தியிலும் டெல்லியிலும் ஒரே கட்சியின் ஆட்சி இருக்குமானால் தடையற்ற வளர்ச்சியை டெல்லி பெறும் என்ற கருத்தையும் பாஜக தொடர்ந்து முன்வைத்தது. 

அடையாள அரசியல் இல்லை; வளர்ச்சி அரசியல் மட்டுமே:

மற்று அரசியலை முன்வைப்பவர்கள் முன் உள்ள மிகப்பெரிய சவால், தேர்தல் அரசியல் என்பது ஒரு எண்ணிக்கை விளையாட்டு என்பதுதான். ஆட்டத்தின் முடிவில் யார் எந்த எண்ணிக்கையை பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். 

வளர்ச்சி என்பது ஒருவகையான மாயச் சொல். பல்வேறாக பிரிந்துள்ள மக்களை ஒருங்கிணைக்க இந்த சொல் அவசியமானதாக இருக்கிறது. ஏழ்மையை ஒழிப்போம், எல்லோருமாகச் சேர்ந்து எல்லோருக்குமான வளர்ச்சியை எட்டுவோம் போன்ற முழக்கங்கள் இந்த கருத்தைத்தான் பிரதிபலிக்கின்றன. 

இந்திய அரசியலை பாழ்படுத்தும் மூன்று முக்கிய தீமைகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான சிவில் சமூகத்தின் தீவிர முயற்சியின் காரணமாக உருவான கட்சி ஆம் ஆத்மி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அந்த மூன்று என்னென்ன?:

பணபலம், ஆள்பலம், குடும்ப அரசியல் எனும் மூன்று தீமைகளை அரசியலில் இருந்து ஒழிக்கும் நோக்கத்துடன் துவக்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சி. புதிதாக துவக்கப்பட்ட அக்கட்சிக்கு 2010ம் ஆண்டில் கிடைத்த அற்புதமான வெற்றி, இந்திய தேர்தல் அரசியல் பணத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற நிலையை மாற்றி, அது அர்ப்பணிப்பு உணர்வை அடிப்படையாகக் கொண்டது என்ற நிலையை ஏற்படுத்தியது. 

சேவையை அடிப்படையாகக் கொண்ட அரசியலை ஆம் ஆத்மி முன்வைத்தது. அதில், அந்த கட்சிக்கு எந்த அளவு வெற்றி கிடைத்தது அல்லது கிடைக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், இந்திய அரசியலில் ஒரு முக்கிய மாற்றத்திற்கான விதையை அது தூவி உள்ளது. 

இதில், முக்கியம் என்னவென்றால், தனது அரசின் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளின் மூலம், சமூகத்துடன் ஒரு கூட்டணியை ஆம் ஆத்மி வெற்றிகரமாக நிறுவியுள்ளது. சமூகத்தில் காணப்படும் பல்வேறு பிளவுகளைத் தாண்டி வண்ணமயமான ஒரு கூட்டணியை அது உருவாக்கியுள்ளது. அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்கும் வழக்கமான ஜனரஞ்சக அரசியலுக்கு அப்பாற்பட்டது அது. 

சமூக விஞ்ஞானிகளான அமித் அஹுஜாவும், பிரதீப் சிப்பெரும் பரந்துபட்ட வாக்காளர்களை மூன்று சமூகக் குழுக்களாக அடையாளம் காண்கிறார்கள். வாக்களிப்பதை ‘உரிமை’ சார்ந்த ஒன்றாக கருதுபவர்கள் ஒரு வகை. சமூக பொருளாதார அடுக்கில் இவர்கள் கீழ் நிலையில் இருப்பவர்கள். அரசின் வளங்களைப் பெறுவதற்கான கருவியாக தேர்தலை கருதுபவர்கள் ஒரு வகை. இவை இரண்டுக்கும் இடையே ஒரு பிரிவு இருக்கிறது. அது தேர்தலை ஒரு சமூகக் கடமையாக கருதக்கூடியது. 

இந்த மூன்று பிரிவுகளைக் கொண்ட தேர்தல் அரசியலில் ஆம் ஆத்மி எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்க முடியும் என்பதுதான் முக்கியமான கேள்வி. மருத்துவம், கல்வி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் தங்கள் அரசு செய்த சாதனைகளின் அடிப்படையில் ஆம் ஆத்மி வாக்கு கோருகிறது. அடையாளத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கக்கூடிய, ஜனரஞ்சகத்தை முன்னிருத்தக் கூடிய அரசியலுக்கு மத்தியில், தனது இந்த அணுகுமுறையுடன் ஆம் ஆத்மியால் வெற்றியை தொடர முடியுமா என்ற கேள்வி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.   

ஷாஹீன் பாக், ஜேஎன்யூ, ஜாமியா: ‘மையப்படுத்துதலுக்கான’ மேடை அமைக்கப்படுகிறதா?:

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் இம்முறை டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. ஜேஎன்யு-வில் கட்டண உயர்வு எதிர்ப்பு இயக்கம் முதல் ஷாஹீன் பாக்கில் சிஏஏ, என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்கள் வரை அனைத்தும் டெல்லியை மையமாகக் கொண்டே நடக்கின்றன.

CAA மற்றும் NRC-க்கு எதிரான போராட்டங்களில் இருந்தும், போராடுபவர்கள் சிறு சிறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்ற பாஜகவின் விமர்சனத்தில் இருந்தும் தள்ளி நிற்கவே முயல்கிறது ஆம் ஆத்மி. எனினும், இதனை பிரதான பிரச்னையாக மாற்றப் பார்க்கிறது பாஜக. CAA மற்றும் NRC-க்கு எதிராக போராடுபவர்களை தேச விரோதிகள் என வர்ணிக்கிறது அக்கட்சி. 

வளர்ச்சி அரசியலை மேற்கொள்ளாத நிலையில், அதில் இருந்து மக்களை திசை  திருப்பும் நோக்கிலேயே CAA-NRC போன்றவற்றை பாஜக கொண்டு வருவதாக ஆம் ஆத்மி விமர்சிக்கிறது. எனினும், தேர்தல் வியூகங்களைத் தாண்டி இதற்கு வேறு அரசியல் முக்கியத்துவம் இருக்கிறதா?

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, பாலாகோட் வான் தாக்குதல் முதல், தற்போதைய ஷாஹீன் பாக் போராட்டங்கள் வரை பல்வேறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் ஆம் ஆத்மி எத்தகைய கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறது என்பதை கவனித்தால் அது இடதுசாரியாகவும் இல்லாமல், வலதுசாரியாகவும் இல்லாமல், 'மையவாத' நிலையை கொண்டிருப்பதை கவனிக்க முடியும். 

பாஜக முன்வைக்கும் தீவிர தேசியவாதத்தில் இருந்தும், ‘இடதுசாரி’ கட்சிகள் முன்வைக்கும் கடும் விமர்சனங்களில் இருந்தும் விலகி இருப்பதன் மூலம், காங்கிரசின் அழிவால் இந்திய அரசியலில் ஏற்பட்டுவிட்ட வெற்றிடத்தை மீண்டும் நிரப்ப ஆம் ஆத்மி முயல்கிறது. 

டெல்லியில் நடைபெற்ற கடந்த சில சட்டமன்றத் தேர்தல்களில், பாஜக  கணிசமான வாக்குகளைப் பெற்றதன் மூலம் (கடந்த நான்கு தேர்தல்களிலும் 30-35% க்கு இடையில்) பாஜக டெல்லியில் வலுவுடனே இருக்கிறது.

எனினும், காங்கிரஸ் கட்சி மோசமான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 2003 தேர்தலில் 48.1 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ், 2015 ல் 9.7 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. மக்கள் செல்வாக்கு மிக்கத் தலைவர்களை முன்னிறுத்தாமல், காங்கிரஸ் கட்சி மந்தமான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, அக்கட்சியின் வாக்குகளை ஆம் ஆத்மி மீண்டும் அறுவடை செய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. 

மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகளை பாஜக மேற்கொண்டுள்ள நிலையில், சிறுபான்மை வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்குப் பதில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்ல வாய்பபு அதிகரித்துள்ளது. ஏனெனில், தேர்தல் களத்தில் காங்கிரஸ் மிகுந்த பலவீனத்துடனேயே காட்சி அளித்து வருகிறது.  

தீர்ப்பின் பன்முக முக்கியத்துவம்:

இம்மாதம் 11-ம் தேதி அன்று வெளியாக உள்ள தீர்ப்பு, பல வகைகளில் தேசிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும். குறிப்பாக, இந்திய அரசியல் கட்சிகளின் அரசியல் மொழி மீது இது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

வாக்காளர்களின் முன்னுரிமை எவ்வாறு இருக்கிறது என்பதையும், வெற்றி பெறப் போவது அடையாள அரசியலா அல்லது வளர்ச்சி அரசியலா என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் தீர்மானமாக சொல்லிவிடும். 

‘பிரதமர் பதவிக்கு மோடி, டெல்லி முதலமைச்சர் பதவிக்கு அரவிந்த்’ என்பதாக டெல்லி வாக்காளர்களில் பெரும் பகுதியினர் சில நாட்களுக்கு முன்பு வரைகூட கூறி வந்ததில் நிறைய அர்த்தம் இருந்தது. எவ்வாறாயினும், இந்த தீர்ப்பு இந்திய கூட்டாட்சியின் எதிர்கால நிலையை கணிசமாக பிரதிபலிக்கும்.

மொழிபெயர்ப்பு: பால. மோகன்தாஸ்

மொத்த எழுத்துக்கள்: 877

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.