மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் உள்ள பேஹாரி பாதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யஷ். சமூக வலைதளமான டிக்டாக்கின் மீது அதீத மோகம் கொண்ட இவர், விதவிதமான வீடியோக்களை எடுத்து டிக்டாக்கில் உலாவ விடுபவர்.
இன்று தனக்கே உரிய ஆர்வத்தில் புதிய முறையில் டிக் டாக் செய்ய களமிறங்க, அதன் விளைவாக எக்குதப்பான விளைவில் மாட்டிக்கொண்டார் யஷ். 'படையப்பா' படத்தில் ரஜினி காந்த் கையால் பாம்பைப் பிடித்து ஸ்டைல் வித்தை காட்டுவது போல், யஷூம் அவரது வீட்டினருகே இருந்த பாம்பைக் கையில் பிடித்து, தனது தோழரை வீடியோ எடுக்கச் சொல்லிருக்கிறார். பாவம் அந்தப் பாம்பு என்ன மூடில் இருந்ததோ, யஷ் கையில் ஒரே போடாகப் போட்டுள்ளது.
யஷ் வலியால் துடிப்பதைக் கண்டு பதறிப்போன, அவரது நண்பர் அருகில் உள்ள மருத்துவரிடம் யஷை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார். ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர், அவருக்கு முதலுதவி அளிக்கவே, நல்லவேளையாக உயிர் பிழைத்தார் யஷ். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து பாம்பை மீட்டுக் காட்டுப் பகுதிக்குள் விட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஏழுமலையானைத் தரிசித்து திருமண நாளை கொண்டாடிய ரன்வீர் - தீபிகா ஜோடி!