12ஆம் நூற்றாண்டில் வீரசைவம் என பசவண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட மதம் பின்னாட்களில் லிங்காயத் என அழைக்கப்பட்டது. இதனை பின்பற்றும் மக்கள் லிங்காயத்துகள் என அழைக்கப்பட்டனர். லிங்காயத் சாதிய கட்டமைப்புக்கு எதிரானது. அன்பையும் தியாகத்தையும் போதிக்கிறது அதன் கோட்பாடுகள். இந்நிலையில் மதுவுக்கு அடிமையான ஆட்டோ டிரைவராக இருந்த தீவான் ஷரிஃப் முல்லா, லிங்காயத் மடத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வட கர்நாடகாவின் கடக் மாவட்டத்திலுள்ள முருக ராஜேந்திர மடத்தின் தலைவராக முல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது போதகராக திகழ்பவர், அதே மடத்தை சேர்ந்த ஸ்ரீமுகருகராஜேந்திர கொரனேஸ்வரா.
இதுகுறித்து முல்லா, இதை செய்யச் சொல்லி யாரும் எனக்கு சொல்லவில்லை. எல்லாம் வல்ல இறைவன் என் மனதுக்குள் இருந்து என்னை வழிநடத்துகிறான் என தெரிவித்தார்.
மேலும் அவர், புனித நூலை எனக்கு அணிவித்து அவர்கள் இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். இஷ்ட லிங்கத்தையும், இந்த கௌரவத்தையும் அவர்கள் எனக்கு வழங்கியுள்ளனர். நான் தர்மத்தின் பாதையில் நடப்பேன். அன்பையும் தியாகத்தையும் பரப்புவேன் என கூறினார்.
ஸ்ரீமுகருகராஜேந்திர கொரனேஸ்வரா இதுபற்றி, நீங்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை. கடவுள் உங்களுக்கு அளித்த நற்பணியை செய்ய மனிதர்கள் வகுத்துல்ல சாதியினை பொருட்படுத்தத் தேவையில்லை என்கிறார்.