தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள சாத்துப்பள்ளியில் மூன்று பேர் குரங்கு ஒன்றை மரத்தில் தூக்கிலிட்டு சித்தரவதைசெய்து கொன்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அதனைக் காணொலியாகப் பதிவுசெய்து வெளியிட்டுள்ளனர். அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அது குறித்து தகவலறிந்த சாத்துப்பள்ளி வனத் துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சாது வெங்கடேஷ்வர் ராவ், கணபதி, ராஜசேகர் என்ற மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். அதையடுத்து அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் அபாராதம் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: குரங்குகளுக்காக குரல் கொடுப்போம்...