கேரளா சபரிமலையில் உள்ள மலிக்காப்பூரம் கோயில் அருகே அமைந்திருக்கிறது சந்நிதானம் சிறப்பு தபால் நிலையம். இந்த தபால் நிலைய சேவை 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தபால் நிலையமானது மண்டல மகரவிளக்கு பூஜை நடக்கும் 66 நாள்கள் மற்றும் விசு பூஜை நடைபெறும் பத்து நாள்கள் என குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே செயல்படும்.
தபால் நிலையத்திற்கு பக்தர்களிடம் இருந்து அவர்களின் மகிழ்ச்சி, துன்பம், குறைநிறைகள், கல்யாண பத்திரிகை உள்ளிட்ட சுபகாரியங்கள் குறித்த கடிதங்கள் சுவாமி ஐயப்பனுக்கு தெரிவிக்கும் வகையில் எழுதி அனுப்பப்படுகிறது. அதில் ஒரு சிலர் மணி ஆர்டர் அனுப்புவதும் உண்டு.
இங்கு வரும் கடிதங்களை தபால் நிலைய அலுவலர்கள் மொத்தமாக சபரிமலை தேவஸ்தானம் போர்டின் நிர்வாக அலுவலரிடம் கொண்டு சேர்த்துவிடுவது வழக்கம். இந்தியாவிலேயே ஆண்டிற்கு மூன்று மாதங்கள் மட்டும் செயல்படும் ஒரே சிறப்பு தபால் நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பிளாஸ்டிக்கை கொடுத்து விரும்பிய மலர் செடியை எடுத்துச் செல்லுங்கள்...!