ETV Bharat / bharat

விமான நிலையத்திலிருந்து தப்பிக்க முயன்ற பெண்! - A Lady who traveled from Chennai tried to Escape from the Airport

கரோனா சூழலில் சென்னையிலிருந்து பெங்களூரு விமான நிலையம் வந்த பெண், அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Lady who traveled from Chennai tried to Escape

author img

By

Published : May 26, 2020, 10:38 AM IST

பெங்களூரு: சென்னையிலிருந்து பெங்களூர் விமான நிலையம் வந்த பெண், அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கரோனா சூழலில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து விமானம் மூலம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அவர்களை 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இவ்வேளையில், சென்னையிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்த பெண் பயணி, அலுவலர்களை திசைதிருப்பி அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் விமான நிலைய பாதுகாப்பு அலுவலர்கள், இவரின் செயல்பாடுகளை கண்காணித்ததில் சந்தேகம் எழுந்துள்ளது.

உடனடியாக செயல்பட்டு பெண்ணை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சமாதானம் செய்ய முயற்சித்தனர். அதற்கு அலுவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். அவர் குறித்து விமான பாதுகாப்புத் துறை விசாரணை நடத்திவருகிறது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.