ETV Bharat / bharat

'கனவு நனவானது' - அயோத்தி தீர்ப்பு குறித்து உ.பி முன்னாள் முதலமைச்சர் கருத்து - அயோத்தி தீர்ப்பு கல்யான் சிங்

லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு சாதகமாக வந்துள்ள தீர்ப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் தெரிவித்துள்ளார்.

kalyan singh
author img

By

Published : Nov 11, 2019, 7:15 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம் ஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பாக நீண்ட காலமாக நிலுவையிலிருந்த வழக்கு அண்மையில் முடிவுக்குவந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ராமர் கோயில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளை அமைக்க உத்தரவிட்டது. அதேபோல் மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலமளித்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு குறித்து, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங், 500 ஆண்டு கால சிக்கல் இந்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. அனைவரையும் அரவணைக்கும் விதமான இந்த தீர்ப்பை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.

அயோத்தி தீர்ப்பு குறித்து கல்யான் சிங் கருத்து
அயோத்தி தீர்ப்பு குறித்து கல்யாண் சிங் கருத்து

ராம் ஜென்ம பூமி இயக்கத்தை முன்னின்று நடத்திய கல்யாண் சிங் அயோத்தியில் 1993ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின் போது அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்.

ராமர் கோயில் கட்டுவதைத் தனது வாழ்நாளில் காண்பதன் மூலம் தனது கனவு நனவாகியுள்ளது எனவும், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாகத் தனது மீதான வழக்கிற்கான பதிலை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கட்டண உயர்வு... ஆடை கட்டுப்பாடுகள்! கொதிக்கும் ஜே.என்.யு மாணவர்கள்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.