ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூர் மாவட்டதில் நாய் ஒன்று மூன்று பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த நாய் தனது குட்டிகளை போலவே மூன்று பன்றிக்குட்டிகளையும் கவனித்து வருகிறது. சுருக்கமாக வளர்ப்புதாய் எனலாம்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் "இப்படி இந்த நாய், பன்றிக் குட்டிகளுக்கு பால் கொடுப்பது ஒரு நாள் கதை அல்ல, தினமும் அது குட்டிகளுக்கு பால் கொடுத்துவருகிறது. அதனால் பன்றிக்குட்டிகளும் நாயை விட்டுச் செல்லாமல் அதனுடன் திரிகின்றன" எனத் தெரிவிக்கின்றனர். எப்படியோ தாய் பாசம் அனைத்திற்கும் ஒன்றுதான்.
இதையும் படிங்க: பாம்பிடம் இருந்து முதலாளியைக் காப்பாற்றிய பாசக்கார வளர்ப்பு நாய்கள்