கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த முரளி கிருஷ்ணன் - சமீஜா தம்பதியினர், புதிதாக ஹாப்பி கவ் ஆர்கானிக்ஸ் என்ற நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.
இந்த சூப்பர் மார்க்கெட் குறித்து விளம்பரங்களையும் செய்தித்தாள்களில் வெளியிட்டுள்ளனர். எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் பெறலாம் என்ற வாசகங்கள் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது.
இதை பார்த்து உண்மை என நம்பிய சாப்ட்வேர் டெக்கி விஸ்வநாத், முதலில், 50 லட்சத்தை முதலீடு செய்துள்ளனர். ஆரம்பத்தில் நான்கு மாதங்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பட்ட நிலையில், பின்னர் லாபம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் முரளி கிருஷ்ணாவிடம் விஸ்வநாத் விசாரிக்கையில், தற்போது நிறுவனம் லாபகரமாக செல்லாமல் நெருக்கடியில் சிக்கியுள்ளது. விரைவில் உங்களுக்கான லாப பணம் மொத்தமாக வழங்கப்படும். இந்தச் சூழ்நிலையை சமாளிக்க மேலும் 50 லட்சம் தந்தால் உதவியாக இருக்கும். விரைவில் உங்களின் பணம் வந்தடையும் என ஆசை வார்த்தையை கொட்டியுள்ளனர்.
சற்றும் யோசிக்காத விஸ்வநாத், வங்கியில் கடன் பெற்று ரூபாய் 30 லட்சத்தை முரலியிடம் கொடுத்துள்ளார். அடுத்தநாளே, ஹாப்பி நிறுவனம் மூடப்பட்டிருப்பதை கண்டு முரளி அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த தம்பதியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால், ஆர்.டி.நகரில் உள்ள முரளி கிருஷ்ணனின் வீட்டிற்கு நம்பிக்கையுடன் சென்றார். ஆனால், அவர்கள் பணத்தை தராமல் ஏமாற்றியது மட்டுமின்றி வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, புட்டனஹள்ளி காவல் நிலையத்தில் விஸ்வநாத் புகார் அளித்தார். உடனடியாக களத்திலிறங்கிய காவல் துறையினர், கேரளாவின் திருவனந்தபுரத்தில் மறைந்திருந்த முரளி, சமீஜா ஆகிய இருவரையும் அலேக்காக கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், வணிக முதலீடு என்ற பெயரில் பல அப்பாவிகளை இதே போல் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.