கர்நாடகா யம்பத்னல் கிராமத்தில் வசித்து வருபவர் சோப்லு லாமானி. இவர் தனது வயலுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் ஓரத்தில் ஒரு கழுகு இறந்து கிடப்பதைக் கண்டு அருகே சென்றுள்ளார்.
அந்த கழுகின் கால்கள் கட்டப்பட்டு, உடலில் சென்சார் கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். பின்னர், அங்கு திரண்ட அப்பகுதி மக்கள் கழுகின் உடலில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு, அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, எதிரி நாடுகளிலிருந்து இந்த கழுகு வந்திருக்கலாம் என்றும் சில விஞ்ஞான கணக்கெடுப்பிற்காக கழுகை அனுப்பியிருக்கலாம் எனவும் கிராம மக்கள் பல சந்தேகத்திற்கிடமான வழிகளில் சிந்திக்கத் தொடங்கினர்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கழுகை மீட்டு கழுகின் உடலில் பொருத்தப்பட்டிருப்பது கேமராவா அல்லது வேறு ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பொது நிகழ்வில் காங்கிரஸ் உறுப்பினர் கேட்ட கேள்வி - அதிர்ச்சியில் பெண்!