ETV Bharat / bharat

இந்திய - சீன மோதலுக்கு அடிப்படைக் காரணம் என்ன?

author img

By

Published : Jun 22, 2020, 9:27 PM IST

இந்திய - சீன மோதலின் அடிப்படை காரணம் குறித்து லெப்டினண்ட் ஜெனரல் டி. எஸ். ஹூடா ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம் இதோ...

இந்திய - சீன
இந்திய - சீன

லடாக் பகுதியில் உள்ள இந்திய-சீன எல்லையில் அண்மையில் நிகழ்ந்த மோதலில் ஒரு படைப்பிரிவு தலைவர் உட்பட 20 இந்திய வீரர்கள் வீர மரணம் எய்தியது, நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வு, எல்லையில் தொடரும் பதற்றத்தையும் அதன் தீவிரத்தையும் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. 1962-ஆம் ஆண்டு இந்திய-சீன போருக்குப் பின்னர், இரு தரப்பும் சந்திக்கும் மிகக் கடுமையான நெருக்கடி இதுவேயாகும். மேலும், இரு நாட்டு உறவில் பார தூர தாக்கத்தை ஏற்படுத்தப்போவதும் ஆகும். இந்நிலையில், இந்த பிரச்னைக்கான அடிப்படைக் காரணம், அந்த மலைசூழ்ந்த பனிப்பகுதியின் நில அமைப்பு மற்றும் இந்த சிக்கலை இரு நாட்டு இராணுவமும் எவ்விதம் கையாளும் என்பது குறித்து பொது மக்களிடையே ஆர்வம் உள்ளது. இந்த விஷயங்கள் பற்றிய தெளிவைத் தரும் வகையில், எனது கருத்தை இங்கு முன்வைக்கிறேன்.

நடப்பில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LAC)

1962-ல் இந்தியா மீது போர் தொடுத்த சீன இராணுவம், மேற்கு லடாக்கில் 38,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கைப்பற்றியது. இவ்வாறு, சீன ஆக்கிரமிப்பால் உருவான, பரஸ்பர அங்கீகாரமற்ற புதிய எல்லை LAC, அதாவது நடப்பில் உள்ள எல்லைக்கோடு, என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், வரைபடங்களிளோ, களத்திலோ இந்த எல்லையானது இதுவரையிலும் வரையறுக்கப்படவில்லை என்பதால், இரு நாடுகளுக்கும் எல்லை குறித்த மாறுபட்ட பார்வை தொடர்கிறது.

இந்திய துருப்புகளும் சரி, சீன படைகளும் சரி தங்களது எல்லை எதுவரை என கருதுகிறார்களோ, அதுவரை ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். இரு தரப்புக்கும் மாறுபட்ட கருத்துடைய பகுதிகளுக்கு, இரு நாட்டு இராணுவ வீரர்களும் ரோந்துப் பணியில் ஈடுபடும் பொழுது, நேரெதிர் நிற்கும் சமயங்களும் தவிர்க்க இயலாமல் நிகழ்வதுண்டு. அத்தகைய நேரெதிர் நிகழ்வுகளை சுமுகமாக, சமாதானமாக முடிவுக்கு கொண்டுவர பல்வேறு உடன்படிக்கைகளும், இரு தரப்பு வீரர்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளும் நடைமுறையில் உள்ளன. உதாரணமாக, இந்தியா-சீனாவுக்கு இடையே 2013-ஆம் ஆண்டு கையெழுத்தான ”எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை”-யின் பிரிவு VIII பின்வருமாறு கூறுகிறது:

”நடப்பில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பொதுவான கருத்தொற்றுமை இல்லாத இடங்களில், இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படைகள் நேரெதிர் வரும் சூழலில், இருதரப்பும் உச்சபட்ச பொறுமை காக்க, இருதரப்பும் ஒத்துக்கொள்கின்றன. மேலும், எதிர் தரப்புக்கு ஆத்திரமூட்டும் விதத்தில் செயல்படுவதைத் தவிர்க்கவும், பலப் பிரயோகத்தையும், பலப் பிரயோகம் செய்வதாக அச்சமூட்டுவதையும் கைவிடுவதுடன், இரு தரப்பினரும் பரஸ்பர மரியாதையைக் கடைபிடிக்கவும், துப்பாக்கிச் சூடு அல்லது தளவாடங்கள் சகிதம் மோதல் ஏற்படுவதை தவிர்க்கவும், இருதரப்பும் ஒத்துக்கொள்கின்றன.”

எல்லைப் பகுதி
எல்லைப் பகுதி

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை இரு தரப்பும் கறாராகக் கடைபிடித்த காரணத்தால், இந்திய-சீன எல்லைப் பகுதியில் அமைதி நிலவியது. ஒரே ஒருமுறை, 1975-ல், எல்லையில் நிகழ்ந்த மோதலில் நான்கு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த அமைதியான சூழல், மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற்ற எல்லைதாண்டிய சீன ஊடுருவலால் குலைந்து போய்விட்டது.

கிழக்கு லடாக்கின் நிலவியல் அமைப்பு:

கடல் மட்டத்தில் இருந்து மிக உயரத்தில் அமைந்துள்ள பாலைவனப் பிரதேசம்தான் லடாக். அதன் கிழக்குப் பகுதியை ஒட்டி திபெத்திய பீடபூமி உள்ளது. பாங்காங் த்சோ ஏரியும் கல்வான் ஆற்றுப் பள்ளத்தாக்கும் 14,000 அடி உயரத்தில் அமைந்திருக்க, வெந்நீர் ஊற்றுப் பகுதி (Hot Spring Area), 15,500 அடி உயரத்தில் உள்ளது. இந்த மூன்று இடங்கள்தான் தற்போது, இரு நாட்டு இராணுவமும் எதிரெதிர் நின்று மல்லுக்கட்டும் பிரச்னைக்குறிய பகுதிகளாகும்.

பரவசமூட்டும் எழில் மிக்க பாங்காங் த்சோ ஏரி மற்றும் ஆபத்து நிறைந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில்தான், இந்திய-சீன படைகளுக்கு இடையே தற்போதைய கடும் மோதல் வெடித்துள்ளது. பாங்காங் த்சோ ஏரியின் வடக்கு கரையில், இரு நாடுகளுக்கும் எல்லை குறித்த கருத்து வேறுபாடு உள்ளது. இருப்பினும், கடந்த காலங்களில், இரண்டு தரப்பினருமே தங்கள் எல்லை என்று உரிமை கோரும் பகுதி வரை ரோந்து சென்று வந்துள்ளனர். சீனாவின் பார்வையில், ஏரியின் வடகரையின் 4ஆவது விரல் பகுதிவரை அதன் எல்லை உள்ளது. மாறாக, இந்தியா 8ஆவது விரல் பகுதிவரை தனது எல்லை உள்ளதென உரிமை கோருகிறது. தற்போது, தான் உரிமை கோறும் பகுதிகளை, சீனா தனது இராணுவ ஆக்கிரமிப்பில் கொண்டுவந்துள்ளது. இதனால், இந்திய துருப்புகள், தங்கள் நாட்டு எல்லை என கருதும் பகுதிகள் வரையிலும் முன்புபோல் ரோந்துப் பணி மேற்கொள்வதை தடுக்கும் வகையில் சீன இராணுவம் செயல்படுகிறது.

எல்லைப் பகுதி
எல்லைப் பகுதி

கல்வான் பள்ளத்தாக்கை ஒட்டிய நடப்பு எல்லைக் கட்டுப்பாடுக் கோடு,

இந்தியா அண்மையில் அமைத்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சாலைக்கு 6 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. தௌலத் பெக் ஓல்டி (DBO) வரை செல்லும் இந்த அனைத்து பருவ சாலை உலகின் மிக உயரத்தில் இந்தியா அமைத்துள்ள விமான தளத்தினை இணைக்கிறது. தௌலத் பெக் ஓல்டி-யை ஒட்டியுள்ள நமது படைத் தளங்களுக்கு தேவையான பொருட்களையும், தளவாடங்களையும் சேர்த்திட இந்த சாலை – உறைபணி காலமானாலும், கோடை காலமானாலும் – உயிர்நாடியாக விளங்குகிறது. டர்புக்-இல் தொடங்கும் இந்த 255 கிமீ சாலைக்கான பணி 2000-ல் ஆரம்பித்து, பெரும்பகுதி நிறைவுற்றாலும், இராணுவ பயன்பாட்டுக்கு முழுமையாக வருவதில் சிக்கல் இருந்தது. காரணம், ஷயோக் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததே. இந்தக் குறையைப் போக்கும் விதமாக கட்டப்பட்ட பாலத்தை, பாதுகாப்பு அமைச்சர் 2019-ல் திறந்துவைத்தார். தற்போது, கேந்திர முக்கியத்துவம் உள்ள இந்த பாதை வழியாக, வடக்கு லடாக் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளுக்கு நமது படை வீரர்களையோ, இராணுவ தளவாடங்களையோ அதி விரைவாக சென்று சேர்க்க முடியும்.

எல்லைப் பகுதி
எல்லைப் பகுதி

கல்வான் பள்ளத்தாக்கு வழியாக நடப்பு எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை சீன துருப்புக்கள் நுழையும் பட்சத்தில், இந்த இராணுவ முக்கியத்துவம் மிக்க பாதையைத் தகர்த்து துண்டாட வாய்ப்புண்டு. இத்தகைய சூழலில்தான், சீனப் படைகள் நமது எல்லைக்குள் நுழைவதை இந்திய வீரர்கள் வலுவாக எதிர்த்து நின்றனர். இதன் விளைவாகவே, ஜூன் 15 அன்று நமது படை வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

எல்லையில் நிலவும் பதற்றம் எந்த அளவு தீவிரமானது?

இந்திய சீன எல்லையில் இதற்கு முன்னரும் சீன ஊடுருவல் நிகழ்ந்துள்ளது. அவற்றுள் சிலவற்றில், இரு இராணுவமும் மாதக்கணக்கில் நேரெதிர் நின்றுள்ளன. உதாரணமாக, 2013-ல் தேப்சாங், 2014-ல் ச்சுமார் மற்றும் 2017-ல் டோக்லாம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இருப்பினும், இவையெல்லாம் அந்தந்த பகுதிக்குள்ளான நிகழ்வுகளாக சுமூக முடிவுக்கு வந்தன. மேலும், இரு தரப்புப்புக்கும் இடையே வன்முறையோ பலப் பிரயோகமோ இன்றி தீர்வு காணப்பட்டன. ஆனால், தற்போதைய சீன நடவடிக்கை முற்றிலும் வித்தியாசமானது.

மிக நீண்ட எல்லையின் பல்வேறு பகுதிகளில், சீனா தனது இராணுவ கட்டமைப்பை வலுப்படுத்தி, படை வீரர்களையும் தளவாடங்களையும் குவித்து வருவது தற்செயல் நிகழ்வல்ல. இந்த படைக்குவிப்பு, சீன அரசின் உயர்மட்ட உத்தரவு இல்லாமல் சாத்தியமல்ல. மேலும், சீன இராணுவ நடவடிக்கையில் கையாளப்பட்ட வன்முறை, இதுவரை இல்லாத ஒன்று. குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையேயான உடன்படிக்கைகளில் உள்ளபடி இரு நாட்டுப் படைகளாலும் இதுவரை பின்பற்றப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் முற்றிலும் சிதறுண்டு போயிருப்பதைக் காட்டுகிறது.

இனி வரும் காலங்களில், சீன இராணுவம் இன்னும் மேலதிக முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் என எதிர்பார்க்கலாம். சீனாவின் நடவடிக்கை காரணமாக, இந்தியாவும், எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள தனது படை வீரர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் இது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், அண்மைக் காலங்களில் நடப்பு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அமைதியான எல்லையாக இல்லாமல், பதற்றம் நிறைந்ததாகவே இருக்கும்.

எல்லையில் நடைபெற்ற தற்போதைய நிகழ்வுகளால், இந்திய – சீன உறவு நிச்சயம் பாதிப்புக்கு உள்ளாகும். அதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன. சீனாவுக்கு எதிரான கொந்தளிப்பு, நாடு முழுவதும் மக்களிடையே உள்ளது. இந்த எல்லைப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காணப்படுகிறது என்பது ஒருபுறம் இருக்க, இந்திய மக்கள், சீனா தனது இராணுவ பலம் கொண்டு தங்கள் தாயகத்தை மிரட்டிப் பார்க்க எத்தனிப்பதை ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்.

இதையும் படிங்க: சீன ஊடகம் மோடியைப் புகழ்வதற்கு காரணம் என்ன? - ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.