கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பசுக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில், மற்றொரு புறம், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சில வன்முறையாளர்கள், பசுக்களை இறைச்சிக்காகக் கடத்திச் சென்றதாக சிலர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த பிரச்னையும் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
![9,261 cattle died in UP shelters in 2019](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6184954_cattle.jpg)
இந்நிலையில், பிஎஸ்பி உறுப்பினரான சுஷ்மா பட்டேல், கால்நடைமுகாம்களில் இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை எவ்வளவு என உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பினார். அதற்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் லெட்சுமி நாராயணன் சவுத்திரி, 9,261 கால்நடைகள் கடந்த வருடம் உயிரிழந்தாகவும், அனைத்தும் இயற்கை காரணங்களால் உயிரிழந்ததால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பதிலளித்தார்.
தொடர்ந்து 'கால்நடைகளின் மரணம் என்பது ஏதேனும் நோயால், அல்லது திட்டமிட்டு செய்யப்படும் பாதுகாப்பு மின்வேலிகளால்தான் ஏற்படுகின்றன. இந்நிலையில் இயற்கை மரணம் எவ்வாறு நிகழமுடியும் என்ற சந்தேகம் அடிப்படையாகவே எழுகிறது. கால்நடைகளை உடற்கூறு ஆய்வு செய்யாமல், எந்த அடிப்படையில் இயற்கையான மரணம்' என அரசு தரப்பில் சொல்லப்படுகிறது என்று எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினருமான ராம் கோவிந்த் சவுத்திரி கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: குடியரசுத் துணைத்தலைவரின் வருகை: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்