இது குறித்து யுனிசெஃப் அமைப்பானது, கரோனா ஊரடங்கில் பள்ளிக் குழந்தைகளின் வயது, பாலினம், சமூக-பொருளாதார நிலை உள்ளிட்டவை குறித்து 141 நாடுகளில் ஆய்வு நடத்தியது.
அதில், ஊரடங்கிற்குப் பிறகு பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பெரும்பாலான குழந்தைகள், பள்ளிக்குத் திரும்புவதில்லை, மேலும் பலர் குழந்தைகள் நிரந்தரமாக பள்ளிக்குச் செல்வதை தவிர்க்க வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதன்படி உலகெங்கிலும் 90 விழுக்காடு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 74 கோடி பெண்களும், 1 கோடிக்கும் அதிமானோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்வில், பள்ளிக் குழந்தைகள் மனநல பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளி மூடல்கள், ரத்துசெய்யப்பட்ட நிகழ்வுகள், திடீர் தேர்வுகள் என கல்வி தரம், மனநலம் குறைபாட்டிற்குத் தள்ளப்படுகின்றனர்.
அத்துடன் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு அதிக அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றன. விரிவான கற்றல் பாதிக்கப்படுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் 25 கோடி பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது - யுனிசெப் அதிர்ச்சி தகவல்