மத்திய பிரதேச மாநிலம் மன்ஷாகேடி கிராமத்தைச் சேர்ந்தவர் கெவத். இவர் கோபித்துக்கொண்டு சென்ற தனது மனைவியை அழைத்து வருவதற்காக குடும்பத்தோடு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பயங்கரமாக தாக்கிக் கொண்ட அவர்கள் ஒருவருக்கொருவர் தீ கொளுத்தி உள்ளனர்.
இதில் ஐந்து வயது சிறுவன் உள்பட ஒன்பது நபர்களுக்கு தீக் காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அதில் சிறுவன் நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட தீ விபத்து: இரண்டு சிறுவர்கள் காயம்!