உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் சட்டவிரோதமாக ஆன்லைன் பாலியல் குற்றம் நடைபெற்றுவருவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்த து. இதுதொடர்பாக விளம்பரம் ஒன்றையும் ட்விட்டரில் பார்த்த காவல்துறையினர், ரகசிய தேடுதல் வேட்டையில் களமிறங்க முடிவு செய்தனர்.
அந்த ட்விட்டர் லிங்கை ஒரு ரகசிய காவலரை தொடர்புகொள்ள வைத்து நோட்டம் விட வைத்தனர். இதையடுத்து, ரகசிய முகவர் அளித்த தகவலின்பேரில் கான்பூரில் உள்ள ஒரு வீட்டில் திடீரென ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த வாடிக்கையாளர், விடுதியை நடத்துபவர், முகவர்கள் என மொத்தமாக 11 பேரை அதிரடியாக கைதுசெய்தனர்.
மேலும், 9 பெண்களை பத்திரமாக மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், "பல மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் ஏமாற்றி வலுக்கட்டாயமாக தொழிலில் ஈடுபடவைத்துள்ளனர். இப்பெண்களை வாடிக்கையாளர்களிடம் கல்பனா குப்தா என்ற நபர் மூலம் ஒப்படைக்கப்படுவது தெரியவந்தது. மேலும், அங்கிருந்து 21 செல்போன்கள், 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல்செய்தனர்.
பின்னர், பெண்கள் அளித்த தகவலின்படி, நாடு முழுவதும் சட்டவிரோதமாகச் செயல்படும் பாலியல் விடுதிகளைக் கண்டறியும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.