ETV Bharat / bharat

'9.73 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர்' புதுச்சேரி மாநில தேர்தல் அலுவலர் - puducherry

புதுச்சேரி: மக்களவைத் தேர்தலில் சுமார் 9 லட்சத்து 73 ஆயிரத்து 161 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளதாக புதுச்சேரி மாநில தேர்தல் அலுவலர் கந்தவேலு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில தேர்தல் அலுவலர் கந்தவ்லு பேட்டி
author img

By

Published : Apr 17, 2019, 10:37 AM IST

புதுச்சேரியில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் கந்தவேலு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 9 ,73, 161 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

புதுவை முழுவதும் 970 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 222 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 25 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநில தேர்தல் அலுவலர் கந்தவேலு பேட்டி
தேர்தலையொட்டி புதுச்சேரி மாநிலம் முழுவதும் மது விற்பனை தடை ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக மொத்தம் 4 ஆயிரத்து 433 வாக்குச்சாவடி அலுவலர்களும், புதுவை காவல்துறைக்கு உதவியாக பத்து துணை இராணுவ கம்பெனிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுவரை ஒரு மதுபானக் கடை, இரண்டு சாராயக் கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணம் 3 லட்சத்து 44 ஆயிரத்து 18 ஆகும். மேலும், ஒன்பது லட்சத்து 21 ஆயிரத்து 245 ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.

Intro:புதுச்சேரியில் 222 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை யாகவும் அவற்றில் 25 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை கண்டறியப்பட்டுள்ளது என்று புதுச்சேரி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார்

Body:புதுச்சேரி 16 புதுச்சேரி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கந்தவேல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் புதுச்சேரியில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 9 ,73 161 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்று அவர் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் 1209 வி வி பேட் இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளது 970 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது இதில் 222 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை யும் அதில் 25 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை யாகவும் கண்டறியப்பட்டு உள்ளது என்றார் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நூறு வாக்குச்சாவடியில் ஐபிகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது புதுச்சேரி மாநிலம் முழுவதும் தேர்தலுக்காக மது விற்பனை தடை காலம் அறிவிக்கப்பட்டுள்ளது இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை தடை காலம் அறிவிக்கப்பட்டு உள்ளது என்றார் புதுச்சேரியில் தேர்தலுக்காக மொத்தம் 4 ஆயிரத்து 433 வாக்குச்சாவடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் புதுவை காவல்துறைக்கு உதவியாக பத்து துணை இராணுவ கம்பெனிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர் என்றார் புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியில் 33 தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது கலால் தொடர்பாக 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது 8நான்கு சக்கர மற்றும் 24 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ஒரு மதுபான கடை மற்றும் 2 சாராயக் கடைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளது என்றார் தேர்தல் தொடர்பாக ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணம் 3 லட்சத்து 44 ஆயிரத்து 18 ஆயிரத்து 245 மதுபானங்கள் 5 ஆயிரம் லிட்டர் அதன் மதிப்பு ஒன்பது லட்சத்து 21 ஆயிரம் ஆகும் என்றார்

Conclusion:புதுச்சேரியில் 222 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை யாகவும் அவற்றில் 25 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை கண்டறியப்பட்டுள்ளது என்று புதுச்சேரி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.