ETV Bharat / bharat

கரோனா பணிகள்: வாரம் ஒரு முறை 850 கி.மீ. காரில் பயணிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர்!

author img

By

Published : Aug 15, 2020, 11:05 AM IST

புதுச்சேரி: கரோனா நிவாரணப் பணிகளுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வாரம் ஒரு முறை 850 கி.மீ பயணம் செய்து ஏனாம் பிராந்தியம் சென்று வருகிறார்.

health-minister-malladi-krishna-rao
health-minister-malladi-krishna-rao

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. அவை புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஆந்திராவில் உள்ள ஏனாம் பகுதிகளாகும்.

அதில் ஏனாம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மல்லாடி கிருஷ்ணாராவ். அவர் புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்துவருகிறார்.

இந்த நிலையில் ஏனாம் பிராந்தியத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனால் மல்லாடி கிருஷ்ணாராவ் வார சனி, ஞாயிறுகளில் 850 கி.மீ. புதுச்சேரியிலிருந்து ஏனாம் காரில் பயணம் செய்துவருகிறார். அதற்காக 11 மணி நேரம் ஒதுக்குகிறார்.

வழக்கமாக சென்னையிலிருந்து விமானத்தில் விசாகப்பட்டினம் சென்று அங்கிருந்து கார் மூலம் ஏனாம் செல்வார். தற்போது விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் அவர் காரில் சென்றுவருகிறார்.

இதையும் படிங்க: கிரண்பேடியால் ஏனாம் பிராந்தியத்தில் சுகாதாரக்கேடு: அமைச்சர் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.