இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், "உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் கோவிட்-19 நோய்ப் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 80% நோயாளிகளுக்கு அறிகுறிகள் குறைந்தளவில் தென்பட்டதாகவும் பலருக்கு நோய் அறிகுறியே தென்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும், சுமார் 15 விழுக்காட்டு நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாவதாகவும், 5 விழுக்காடு பேர் உயிருக்கு ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன" என்றார்.
இதனிடையே, நூற்றில் 80 பேருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோய் துறைத் தலைவர் ராமன் கங்காகேத்கர் எச்சரித்துள்ளார்.
அறிகுறிகள் இல்லாத பலருக்கு நோய்த் தொற்று இருக்குமோ என்ற அச்ச உணர்வில் மக்கள் ஒவ்வொரு நாளையும் கடத்தி வரும் சூழலில், இந்தத் தகவலானது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை 18 ஆயிரத்து 277 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது (இதில் பலர் குணமடைந்து வீடுதிரும்பிவிட்டனர்). உயிரிழப்பு எண்ணிக்கை 588ஆக உள்ளது.
கோவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்க! - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!