ETV Bharat / bharat

கரோனா தாக்கம்: 8 மாநிலங்களில் மட்டுமே 85% நோயாளிகள்; 87% உயிரிழப்பு! - ICMR

டெல்லி: இந்தியாவில் தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட எட்டு மாநிலங்களில்தான் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மொத்த பாதிப்பில் இந்த மாநிலங்கள் 85 விழுக்காடு பங்குவகிக்கின்றன.

இந்தியா கொரோனா
இந்தியா கொரோனா
author img

By

Published : Jun 28, 2020, 2:51 PM IST

இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட எட்டு மாநிலங்களில்தான், கரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளது. மொத்த பாதிப்பில், இந்த மாநிலங்கள் 85 விழுக்காடு பங்குவகிப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதேபோல், கரோனாவால் உயிரிழந்தவர்களில் 87 விழுக்காடு பேர், இந்த எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்தியச் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், குணமடைந்தோர் விழுக்காடு 58.13ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.9 லட்சமாகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2.96 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. ஆறு நாட்களில் மட்டுமே, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, மத்தியச் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில், ”நாட்டில் ஒரே நாளில் (ஜூன் 26) இதுவரை இல்லாத அளவில், 18 ஆயிரத்து 552 பேருக்கு, கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 8 ஆயிரத்து 953ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஒரு லட்சமாக உயர, 110 நாள்களானது. ஆனால், ஒரு லட்சத்திலிருந்து, ஐந்து லட்சத்தைக் கடக்க, 39 நாள்கள் மட்டுமே ஆனது. கரோனா பாதிப்பில் 1.53 லட்சம் பேருடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் தொடர்கிறது. டெல்லி 77 ஆயிரத்து 240 பேருடன் இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு, 74 ஆயிரத்து, 622 பேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

இந்தியாவில், கரோனா பரவலின் ஆரம்பத்தில், தினமும் 1.4 லட்சம் பேருக்கு மட்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இப்போது, மூன்று லட்சத்துக்கும் அதிகமானோருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கரோனா பரவத் தொடங்கியபோது, மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் மட்டுமே ஆய்வகம் இருந்தது. இப்போது, 1,000க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் உள்ளன என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.