ETV Bharat / bharat

'6 ஆண்டுகளில் 9 பெண்கள்' - மேற்குவங்க ஆட்டோ சங்கருக்கு தூக்கு - மேற்கு வங்கத்தின் சைக்கோ கொலைகாரன்

கொல்கத்தா: ஆறு ஆண்டுகளில் ஒன்பது பெண்களைக் கொலைசெய்த தொடர் கொலைகாரனுக்கு மேற்கு வங்க நீதிமன்றம் தூக்குத் தண்டை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

serial killer Kamarujjaman
serial killer Kamarujjaman
author img

By

Published : Jul 7, 2020, 2:26 PM IST

Updated : Jul 7, 2020, 4:57 PM IST

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஆண்டு மே 30ஆம் தேதி 16 வயது சிறுமி ஒருவர், அவரது வீட்டிலேயே பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். அதற்கு எட்டு நாள்களுக்கு முன்னர்தான் மற்றொரு பெண் இதேபோல கொலை செய்யப்பட்டிருந்தார். இதனால் இச்சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அச்சிறுமியின் வீட்டின் வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வுசெய்தனர். அதில், சிவப்பு நிற ஹெல்மெட், சிவப்பு பைக்கில் ஒருவர் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்ததும், அச்சிறுமியின் வீட்டிற்குள் சென்றுவிட்டு, சிறிது நேரத்தில் அவசர அவசரமாக வெளியேறியதும் தெளிவாக பதிவாகியிருந்து.

சந்தேகமடைந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 38 வயதான கம்ருஸ்மான் சர்க்கார் என்பவரைக் கைதுசெய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

சர்க்காரின் கொலைவெறி

2013ஆம் ஆண்டு தொடங்கிய சர்க்காரின் கொலை செய்யும் படலம் 2019ஆம் ஆண்டு வரை நீடித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் சர்க்கார் ஒன்பது பெண்களைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். அவர்களில் இருவரைப் பாலியல் வன்புணர்வும் செய்துள்ளான். இதுதவிர ஆறு பெண்களைக் கொலைசெய்ய முயற்சித்துள்ளான்.

பொதுவாக, ஆண்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டுக் கண்டுபிடிக்கும் சர்க்கார், மதிய நேரத்தில் மின்சார அளவீடு செய்யும் நபர் போல் வீட்டிற்குள் நுழைவான். அப்போது, எதிர்பார்க்காத நேரத்தில் பெண்களைக் கீழே தள்ளி, அவர்கள் மீது அமர்ந்து கொள்வான். அப்போது, தான் மறைத்து வைத்திருக்கும் சைக்கிள் செயின் மூலம் அவர்களின் கழுத்தை நெறுக்கி கொலைசெய்யும் தொடர் கொலைகாரன்தான் (serial killer)
இந்த சர்க்கார். மேலும், அப்பெண்கள் உயிரிழந்ததை உறுதிசெய்ய, தனது சைக்கிள் செயின் மூலம் அவர்கள் தலையிலேயே பலமாக அடிப்பான்.

ராசியான சிவப்பு:

இவனது கொலைவெறி தாக்குதலிலிருந்து இதுவரை ஆறு பெண்கள் தப்பித்துள்ளனர். தங்களைக் கொலைசெய்ய முன்றவன் குறித்து, இவர்கள் அளித்த அங்கு அடையாளங்கள் சர்க்காருடன் ஒத்துபோயுள்ளன. மேலும், மற்ற கொலை சம்பவங்களிலும் சர்க்கார், அதே சிவப்பு நிற ஹெட்மேட்டையும் சிவப்பு பைக்கையுமே பயன்படுத்தியுள்ளான். சிவப்பு தனக்கு ராசியான நிறம் என்பதால் தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தியாக சர்க்கார் வாக்குமூலம் அளித்துள்ளான்.

கொடூரத்தின் உச்சம்:

சர்க்கார் குறித்து காவல் துறையினர் கூறுகையில், "16 வயது முதல் 75 வயது வரை ஒன்பது பெண்களை சர்க்கார் கொலை செய்துள்ளான். அவர்களில் இருவரைப் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளான், சில சமயங்களில் உயிரிழந்த பெண்களின் பிறப்புறுப்புகளைக் கூர்மையான பொருள்களைக் கொண்டு சிதைத்துள்ளான்" என்று தெரிவித்தனர்.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சர்க்காருக்கு திருமணமாகி இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 16 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், தற்போது சர்க்கார் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அரிதினும் அரிதான வழக்காகக் கருதிய மாவட்ட நீதிமன்றம், உச்சபட்ச தண்டையான தூக்கு தண்டை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிங்க: கேரளாவில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

Last Updated : Jul 7, 2020, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.