ETV Bharat / bharat

திருமணத்தை தாண்டிய உறவை மறைக்க சிறுமியை கொன்று வீசிய உறவினர்! - 7 years old girl murder at odisha

பாலசோர்: ஒடிசாவில் 7 வயது சிறுமியை அவரது மாமா கொடூரமாக கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலசோர்
பாலசோர்
author img

By

Published : Dec 15, 2020, 6:40 AM IST

ஒடிசாவின் பாலசூர் மாவட்டத்தில் பலியாபால் காவல் எல்லைக்குள்பட்ட சுந்தர்கோய்லி கிராமத்தில் 7 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையில், சிறுமியின் மாமா தீபக் சாஹுதான் கொடூரமாக கொலைசெய்துள்ளது தெரியவந்துள்ளது.

சிறுமி சுந்தர்கோய்லியில் உள்ள தனது மாமாவின் வீட்டில் தங்கிப் படித்துவந்தார். இந்நிலையில், கிராமத்தைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் தீபக் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவில் இருந்ததைச் சிறுமி பார்த்துள்ளார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தைச் சிறுமி வெளியே சொல்லிவிடுவாளோ என்ற அச்சத்தில், தீபக்கும் மண உறவைத் தாண்டிய காதலில் இருந்த பெண்ணும் சிறுமியின் கழுத்தை அறுத்து கொலைசெய்துள்ளனர். பின்னர், சிறுமியின் சடலத்தை குளம் அருகே ஒரு புதரில் வீசியுள்ளனர்.

எதுவும் நடக்காததுபோல் சிறுமியின் பெற்றோருடன் இணைந்து அவரைத் தேடியது மட்டுமின்றி காவல் நிலையத்தில் காணவில்லை எனப் புகாரும் அளித்திருந்தனர். இதையடுத்து, காவல் துறையினரின் தீவிர விசாரணையில் இவர்கள் இருவரும்தான் சிறுமியைக் கொன்றனர் என்பது தெரியவந்தது.

பின்னர், இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர், மேலும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.