சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவருகிறது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து, பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
இந்தியாவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 84 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலாவதாக சவுதி அரேபியாவிலிருந்து வந்த கர்நாடகவைச் சேர்ந்த முதியவர் உயிரிழந்தார். இரண்டாவதாக டெல்லியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது உடல் மாலை புதுடெல்லி நிகம்போத்காட்டில் உள்ள சி.என்.ஜி தகன மேடையில் மருத்துவக் குழு முன்னிலையில் இறுதி சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இது குறித்து மாநகர அலுவலர் கூறுகையில், உலகெங்கிலும் இந்த வைரஸ் தலைத் தூக்கியுள்ளது. இருப்பினும், இந்தியாவில் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொண்டோம்” என்றார்.
இதையும் படிங்க...வீட்டில் சகோதரியின் சடலத்துடன் ஒரு வாரம் தங்கியிருந்த அண்ணன்: இத்தாலியில் அவலம்