சீனாவின் வூகான் பகுதியிலிருந்து பரவிய கரோனா வைரஸின் புதிய பெருந்தொற்றான கோவிட்-19க்கு இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தொற்றுநோயினால் அதிகம் பாதிப்புள்ளான மாநிலங்களில் தமிழ்நாடு, டெல்லியை பின்னுக்கு தள்ளி மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு நேற்று (ஜூலை8) ஒரே நாளில் ஆறு ஆயிரத்து 603 புதிய பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 23 ஆயிரத்து 724 ஆக உள்ளது. இதுவரை, ஒன்பது ஆயிரத்து 250 பேரின் உயிரை இந்த வைரஸ் குடித்துள்ளது. இதில் மும்பையில் மட்டும் நேற்று 62 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
தற்போதுவரை 91 ஆயிரத்து 084 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று, கண்டறியப்பட்ட ஆறு ஆயிரம் புதிய பாதிப்பாளர்களில் 1,347 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 1,049 பேர் புனே நகர்புறத்தையும், 153 பேர் அவுரங்காபாத்தையும் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவில் ஆறு லட்சத்து 38 ஆயிரத்து 762 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 47 ஆயிரத்து 072 பேர் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 11 லட்சத்து 38 ஆயிரத்து 311 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சுஷாந்த் தற்கொலை: பிரபலங்கள் மீதான வழக்கு தள்ளுபடி