மும்பையில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் இதயநோயால் பாதிக்கப்பட்டு செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில், அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.
இதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மகாராஷ்டிராவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது, உயிரிழப்பு 832 ஆக உள்ளது.
இதையும் படிங்க:கரோனா: உலகம் முழுவதும் 41 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!