இந்தியா - சீனா எல்லை பகுதியில் 60 கம்பெனிகளின் இந்தோ - திபெத் எல்லை காவல் படையினர் (Indo-Tibet Border Police) தற்போது குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 40 கம்பெனி பெட்டாலியன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கிரே ஸோன் எனப்படும் இருநாட்டின் நெருக்கமான எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம், ஐடிபிபி இணைந்து ரோந்து பணி மேற்கொள்வது வழக்கம். தற்போது அங்கு ராணுவத்தினர் குறைக்கப்பட்டு, ஐ.டி.பி.பி. படையினர் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜூன் 15ஆம் தேதி இரு நாட்டு ராணுவம் மோதிக்கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். அதன் பின்னர் போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு ராணுவத்தை விலக்கிக்கொள்ள முடிவெடுத்துள்ளது.
இதன் காரணமாகவே, ராணுவ வீரர்களை குறைத்துக்கொண்டு துணை ராணுவப் படை பிரிவைச் சேர்ந்த ஐடிபிபி படையினர் தற்போது அதிகப்படுத்தப்பட்டுள்ளனர். பொதுவாக ஐடிபிபி படையினர் உள்நாட்டு பாதுகாப்பு பணியிலேயே பணியமர்த்தப்பட்டு வந்த நிலையில், தற்போது எல்லைக் காவல் பணியில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சீன அலுவலர்கள் மீது அமெரிக்கா பயணத் தடை!