கோவிட்19 வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய அரசு உலக நாடுகளுடனான விமானப் போக்குவரத்தைத் துண்டித்துள்ளது, கடந்த வாரம் முதல் சர்வதேச விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக டெல்லி திரும்ப இந்தியர்கள் ஆறு பேர் துபாய் சர்வதேச விமான நிலையம் வந்தனர்.
அப்போது அமீரகம்-டெல்லி இடையே அனைத்து விமானப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் விமான நிலையத்திலேயே கடந்த நான்கு நாள்களாகத் தவித்துவருகின்றனர். அவர்களில் மூன்று பேர் பஞ்சாப் மாநிலத்தையும், மற்றவர்கள் ராஜஸ்தான், டெல்லி, இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
உலகெங்கிலும் உள்ள 160க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று கிருமி காணப்படுகிறது. இந்த உயிர்க்கொல்லி வைரஸை கட்டுப்படுத்த முடியாமல், உலக வல்லரசு நாடுகளே விழிப் பிதுங்குகின்றன. இந்த வைரசின் பரவல் இந்தியாவிலும் காணப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 400க்கும் மேற்பட்டோருக்குக் கரோனா தொற்று காணப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடர் கண்காணிப்பில் 12,519 பேர்!