ETV Bharat / bharat

'விதிமுறைகளை மீறி அதானி நிறுவனத்துக்கு விமான ஒப்பந்தம்!' - அதானி குழுமம்

புதுச்சேரி: லாபகரமாக இயங்கும் ஆறு விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு மத்திய அரசு வழங்க முடிவு செய்திருப்பது விதிமுறையை மீறிய செயலாகும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

nara
author img

By

Published : Jul 29, 2019, 2:34 PM IST

புதுச்சேரியின் முன்னாள் மேயராகவும் முதல் முதலமைச்சராகவும் பதவி வகித்தவர் எட்வேர்ட் குபேர் (Edouard Goubert). தொடக்கத்தில் ஃபிரான்ஸ் ஆட்சி நீட்டிப்பிற்கு ஆதரவாக இருந்த குபேர், பின்னர் இணைப்பிற்கான போராட்டத்தில் இணைந்தது பிரெஞ்சு ஆட்சிப்பகுதியை இந்தியாவுடன் இணைக்க உறுதுணையாக செயல்பட்டார். அவரது பிறந்தநாளான ஜூலை 29 அன்று ஆண்டுதோறும் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது.

அந்தவகையில், இந்தாண்டு புதுச்சேரி பாரதி பூங்கா அருகே அமைந்துள்ள அவரது சிலைக்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் சபாநாயகர் சிவக்கொழுந்து, சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

விழாவில் பங்கேற்ற முதலமைச்சர்

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாராயணசாமி, 'கர்நாடகாவில் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியானது. அரசியலமைப்புச் சட்டம், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் வழங்கப்பட்டுள்ள சபாநாயகர் தீர்ப்பு நியாயமானது' என்றார்.

மேலும் அவர், இந்தியாவில் லாபகரமாக இயங்கும் 14 விமான நிலையங்களில் ஆறு விமான நிலையங்களை பராமரிக்கும் பணியை அதானி குழுமத்திற்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்து ஒப்பந்தம் செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

இது நிதி ஆயோக் அமைப்பின் விதிமுறைகளை மீறி எடுக்கப்பட்டுள்ள முடிவு என சாடிய அவர், இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி குரல் எழுப்பும் என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

Intro:புதுச்சேரியின் முன்னாள் மேயரும் முதல் முதலமைச்சராக பதவி வகித்தவர் எட் வேர்ட் குபேர் அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்Body:புதுச்சேரியின் முன்னாள் மேயரும் முதல் முதலமைச்சராக பதவி வகித்தவர் எட் வேர்ட் குபேர் சூலை 1, 1963 முதல் செப்டம்பர் 11, 1964 வரை முதல்வராக பணியாற்றினார். துவக்கத்தில் பிரெஞ்சு ஆட்சி நீட்டிப்பிற்கு ஆதரவாக இருந்த குபேர் பின்னர் இணைப்பிற்கான போராட்டத்தில் இணைந்தது பிரெஞ்சு ஆட்சிப்பகுதிகள் விடுதலை அடைந்த இந்தியாவுடன் இணைய உறுதுணையாக அமைந்தது.
அவரது பிறந்த நாளான இன்று புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது புதுச்சேரி பாரதி பூங்கா அருகே உள்ள அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அவரைத் தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் மாலை அணிவித்தனர்
நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர

பின்னர் செய்தியாளர்களிடம் நாராயணசாமி
கர்நாடகா அரசியல் நிலவரம் தொடர்பாக பேசியவர் கர்நாடகாவில் கட்சி மாறிய எம்எல்ஏக்கள் அங்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்

கட்சி மாறினால் எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதை பிற மாநில எம்எல்ஏக்கள் நினைவில்கொள்ள வேண்டும் என கர்நாடக சபாநாயகரின் நடவடிக்கைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்துConclusion:புதுச்சேரியின் முன்னாள் மேயரும் முதல் முதலமைச்சராக பதவி வகித்தவர் எட் வேர்ட் குபேர் அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.