ETV Bharat / bharat

வெளி மாநிலங்களிலிருந்து பிகார் திரும்பிய 560 பேருக்கு கரோனா!

பாட்னா: வெளி மாநிலங்களிலிருந்து பிகாருக்கு திரும்பியவர்களில் 560 பேருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Migrant workers tested positive for Coronavirus

author img

By

Published : May 17, 2020, 3:50 PM IST

Updated : May 17, 2020, 5:02 PM IST

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். மத்திய அரசு முதலில் அவர்களை சொந்த மாநிலங்களுக்கு திரும்ப அனுமதி அளிக்க மறுத்தது.

பின்னர், அவர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று இம்மாத தொடக்கத்தில் அறிவித்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிவருகின்றனர்.

இந்நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து பிகாருக்கு திரும்பியவர்களில் 560 பேருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பிகார் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வெளி மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களின் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்.

மே 16ஆம் தேதி வரை மாநிலத்திற்குள் வந்த அனைத்து தொழிலாளர்களின் தரவுகளையும் சேகரித்துள்ளோம். வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து பிகாருக்கு திரும்பியவர்களில் 560 பேருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 172 பேர் டெல்லியிலிருந்தும், 123 மகாராஷ்டிராவிலிருந்தும், 26 பேர் மேற்கு வங்கத்திலிருந்தும் திரும்பியவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2,746 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்களது முடிவுகளும் கிடைத்துவிடும் என்றும் பிகார் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ராகுல் காந்தியிடம் பேசிய வெளிமாநில தொழிலாளர்கள் கைது

Last Updated : May 17, 2020, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.