இமாச்சலப் பிரதேசம் மாநிலம் குல்லு மாவட்டத்தைச் சேர்ந்தவர் முதியவர் விபின் சிங் (56) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது அண்டை வீட்டில் ஐந்து வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வருகிறார். நேற்று முன் தினம் சிறுமியின் தாய் வேலைக்குச் சென்றுள்ளார்.
அப்போது, சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த விபின் சிங் வீட்டின் உள்ளே சென்று சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதில், காயமடைந்த சிறுமி அழுதுகொண்டு இருந்துள்ளார்.
பின்னர் வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய தாயிடம் சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை கூறியுள்ளார். இதைக் கேட்ட தாய் அதிர்ச்சியடைந்து உடனடியாக இது குறித்து குல்லு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதையும் படிங்க:மற்றொரு பொள்ளாச்சியா? மதுரையில் பரபரக்கும் பாலியல் குற்றச்சாட்டு - போலீசார் தீவிர விசாரணை