இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தரிசு நிலமாதல் புவி மேற்பரப்பில் உள்ள மூன்றில் ஒரு பங்கு நிலத்தை பாதிக்கிறது. இதனால், 25 கோடி மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அடுத்த 10 ஆண்டுகளுக்குள் (2023) 50 லட்சம் ஹெக்டர் நிலம் சீரமைக்கப்படும்.
பிற நாடுகளின் உதவியோடு தரசு நிலமாதலை தடுக்க இந்தியா தொடர்ந்து போராடும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்" என்று கூறியுள்ளார்.
தரிசு நிலமாதல் தடுப்பு குறித்த ஐநா மாநாடு அடுத்த மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் நடைபெறவுள்ள நிலை, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இவ்வாறு கூறியுள்ளார்.