ETV Bharat / bharat

தாயைக் காண விமானத்தில் தனியாகப் பயணித்த 5 வயது சிறுவனின் பாசம்! - 5 year old boy flies back home alone after 2 months

பெங்களூரு: ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை இன்று முதல் தொடங்கப்பட்டதால், ஐந்து வயது சிறுவன் டெல்லியில் இருந்து தனியாக விமானத்தில் பயணித்து, தன் தாயைப் பார்க்க பெங்களூரு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

home alone
home alone
author img

By

Published : May 25, 2020, 11:43 PM IST

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் தற்போது வரை 4 கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்ததால், பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கில் சிறிது சிறிதாகத் தளர்வுகளை அறிவித்து வருகிறது, மத்திய அரசு.

அதன் ஒரு பகுதியாகக் கடந்த 2 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த விமான சேவை இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுக்குள் இயக்கப்படும் விமானங்களுக்கு மட்டுமே இன்று பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 வயதுச் சிறுவன் ஒருவன், தனியாகப் பயணித்து டெல்லியிலிருந்து பெங்களூரு வந்தடைந்துள்ளான்.

கெத்து காட்டிய 5 வயதுச் சிறுவன்
தாயைப் பார்க்க விமானத்தில் தனியாகப் பயணித்த 5 வயது சிறுவன்

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, டெல்லியில் உள்ள தன் தாத்தா வீட்டுக்குச் சென்ற பெங்களூருவைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் விஹான் சர்மா, ஊரடங்கால் அங்கேயே சிக்கி கடந்த 2 மாதங்களாகத் தன் தாயை விட்டுப் பிரிந்து தவித்து வந்துள்ளான்.

இந்நிலையில் இன்று விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டதால், சிறப்பு வசதியில் டெல்லியிலிருந்து தனியாக விமானத்தில் பயணித்து பெங்களூரு வந்தடைந்துள்ளான். இன்று காலை 9 மணிக்கு கெம்பகவுடா விமான நிலையம் வந்த சிறுவனை அவரின் தாய், வந்து அழைத்துச் சென்றார்.

இந்தச் சம்பவம் பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களின் மூலம் 5 வயது சிறுவனின் தாய்ப்பாசத்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இதையும் படிங்க: மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் தயாரிப்பு அதிகரிப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.