ராமர் கோயில் இருந்த அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டதாகக் கருதி அதனை 1992ஆம் ஆண்டு கரசேவகர்கள் இடித்துத் தள்ளினர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. பல வருடங்களாக நடைபெற்றுவரும் இவ்வழக்கின் சிக்கலைத் தீர்ப்பதற்காக முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் உச்ச நீதிமன்றம் குழு ஒன்றினை அமைத்தது.
குழு அறிக்கைத் தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. அதன்படி, அக்குழு நேற்று அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில் அயோத்தி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் குழு சார்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவு எட்டப்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது என அக்குழு தெரிவித்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தினமும் விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டார்.