இந்தியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் விஜய் கோயல் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக், "2017ஆம் ஆண்டு 141 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில், 131 சம்பவங்கள் ஜம்மூ காஷ்மீரிலும், எட்டு சம்பவங்கள் மணிப்பூரிலும், அசாம் மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் தலா ஒரு சம்பவம் நடைபெற்றது.
அதேபோல, 2018ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் 312, மணிப்பூரில் எட்டு, நாகாலாந்தில் மூன்று என 318 பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறின," என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் , "பாதுகாப்புப் படை மேற்கொண்ட தாக்குதல்களில் 2017ஆம் ஆண்டு 235, 2018ஆம் ஆண்டு 265 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 85 பேர் வீரமரணம் அடைந்தனர்" என்றும் தெரிவித்தார்.