இந்தியாவில் தற்போது காரோனா பாதிப்பு மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று (ஏப்ரல் 15) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், நாடு முழுவதும் கரோனா பாதிப்பு இடங்கள் சரியாக கண்டறியப்பட்டு அதன் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை சுமார் 400 மாவட்டங்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அடுத்த இரண்டு மூன்று வாரங்கள்தான் கரோனா தடுப்பு நடவடிக்கையில் முக்கிய நாட்கள். உலக அளவில் கரோனா பாதிப்பு முன்னெடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்ட நாடு இந்தியாதான்.
தற்போதைய நிலையில் மகாராஷ்டிரா, கர்நாடகாவில் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளது. இருப்பினும் அம்மாநிலங்களில் வைரஸ் தடுப்பு நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்ளப்படும் என தலைமைச் செயலாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர் என்றார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 11 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது. கரோனா உயிரிழப்பு 392ஆகவும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனாவை தடுக்க இதுதான் ஒரே வழி - ராகுல் தரும் ஐடியா