கரோனா வைரஸ் தாக்கம் கேரளாவில்தான் முதன்முதலாக அதிகளவில் காணப்பட்டது. தினந்தோறும் நூற்றுக்கணக்கில் அதிகரித்த கரோனா எண்ணிக்கை, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும், பரிசோதனை மூலமாகவும் முற்றிலுமாக குறைக்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 10 மாநிலங்களின் பட்டியிலில் கேரளா வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோழிக்கோடு மருத்துவமனையில் சுவாச கோளாறு காரணமாக நான்கு மாத குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இரண்டு நாள்களுக்கு முன்னர் கரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்தனர்.
இதனையடுத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அக்குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கூறுகையில், "குழந்தையை காப்பாற்றுவதற்கான அனைத்துக்கட்ட முயற்சிகளையும் மருத்துவர்கள் செய்தனர். குழந்தையின் இறுதிச்சடங்கு கரோனா வழிமுறைப்படி நடைபெறும்” என்றார்.
இது தொடர்பாக மல்லாபுரம் மருத்துவ அலுவலர் சகீனா Sakeena கூறுகையில், "குழந்தை பிறந்தது முதலே கடுமையான உடல்நலப் பிரச்னைகள் இருந்தன. மூஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறலுடன் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், குழந்தை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
அப்போதும், குழந்தையின் உடல்நிலை சீராக இல்லாத காரணத்தினால்தான், கோழிக்கோடு மருத்துவனைக்கு மாற்றப்பட்டது. குழந்தைக்கு பிறப்பிலேயே மார்பு குறைபாடு, ஏட்ரியல் செப்டல் டிஃபெக்ட் (Atrial Septal Defect) இருந்த காரணத்தினால்தான், கடுமையான சுகாதார பிரச்னைகளுக்கு உள்ளாகியுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மாஸ்க் இல்லையா... வாங்க கரோனா நோயாளியுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்' - மரண பயம் காட்டிய திருப்பூர் போலீஸ்
!