இந்தியாவில் கரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. நாட்டில் இதுவரை 13 ஆயிரத்து 387 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 437 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் இன்று புதிதாக 38 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதில் குறிப்பாக, பல்லாரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம், அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 லிருந்து 353ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கர்நாடகாவில் இதுவரை 82 பேர் கரோனா வைரசிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரசால் மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்புகளும் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அம்மாநிலத்தில் இதுவரை கரோனாவால் 3,205 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 194 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: தரிசனத்திற்கு தற்காலிக தடை : முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கான தொகை திருப்பி அளிக்கப்படும்!