கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 340 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக நேற்று (பிப்.3) நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.
இந்தப் பட்டியலில், உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் உள்ளிட்டவை உள்ளன.
மாநிலங்கள் விவரம்
- உத்தரப் பிரதேசம்- 52பேர்
- தமிழ்நாடு -43 பேர்
- டெல்லி-36
- மகாராஷ்டிரா-34
- குஜராத், ஹரியானா-31
இந்தியாவில், தொழில்நுட்பங்கள் வளர்ந்து வந்தாலும், மனிதக் கழிவை அகற்ற இயந்திரங்களைப் பயன்படுத்த போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை. பல சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்த பின்னும் அதைச் செயல்படுத்தாத அரசின் அலட்சியப்போக்கு இந்த உயிரிழப்புகளின் பின்னணி என்பது முகத்தில் அறையும் உண்மை.
இதையும் படிங்க:பாதுகாப்பு உபகரணங்களின்றி கழிவுநீரைச் சுத்தம் செய்யும் பணியாளர்கள்!