நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் கேரள மாநிலத்தில் அதிகளவில் காணப்படுகிறது. வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் அம்மாநில அரசு தவித்து வருகிறது. இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில்," கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக ஒரே நாளில் 32 பேர் பாதிப்படைந்துள்ளனர். அதில், 17 நபர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும், 15 நபர்கள் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள்" எனத் தெரிவித்தார்.
இதனால், அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. அதில், 20 நபர்கள் குணமடைந்துள்ளனர், ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வைரஸ் பரவலை தமிழ்நாடு அரசு கட்டுக்குள் வைத்துள்ளது - மத்திய அமைச்சர் பாராட்டு