சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா (கோவிட் 19) வைரஸ் தொற்று, தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவிவருகிறது. குறிப்பாக இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 39 பேருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது கேரளாவைச் சேர்ந்த மூன்று வயது குழந்தைக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அக்குழந்தையும் பெற்றோரும் இத்தாலியிலிருந்து மார்ச் 7ஆம் தேதி இந்தியா வந்துள்ளனர்.
அப்போது, நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அக்குழந்தைக்கு கோவிட் 19 வைரஸ் தொற்றின் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கொச்சியைச் சேர்ந்த அக்குழந்தைக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்தக் குழந்தைக்கு எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. குழந்தையின் பெற்றோரும் மருத்துவமனையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் கேரளாவில் கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: இத்தாலியில் ஒரே நாளில் 133 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!