ராஜஸ்தான் மாநிலம், சவாய் மாதோபூர் மாவட்டம் படோடா பகுதியைச் சேர்ந்தவர் டீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 24ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர் டீனாவை பாலியல் வன்புணர்வுசெய்தனர். இது குறித்து டீனா படோடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மூவரையும் தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகானத்தில் சுற்றித்திரிந்த மூவரைக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டானர்.
அதில், இளம்பெண் டீனாவை பாலியல் வன்புணர்வுசெய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மூவரையும் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:ஹிந்தி பட வசனங்கள் பேசி தந்தையை கொன்ற மகன்!