புதுச்சேரி சட்டப்பேரவை வளாக அலுவலகத்தில் இருந்தபடி, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், "புதுச்சேரியில் புதியதாக மேலும் மூன்று பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மூன்று பேர் வடமங்கலம், குரும்பாபேட், வேல்முருகன் நகரைச் சார்ந்தவர்கள். இவர்கள் மூவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
காரைக்கால் பகுதியில் சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் மாநில அளவில், குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் இரண்டு தமிழர்கள் உள்பட 27 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அவசர சிகிச்சைக்காக மட்டுமே வெளி மாநில நோயாளிகளை அனுமதிக்க வேண்டும்'