அதி தீவிரப் புயலாக உள்ள ஆம்பன் அடுத்த ஆறு மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுவாகி, நாளை மாலை மேற்கு வங்கத்தைத் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
1999ஆம் ஆண்டு ஒடிசாவைத் தாக்கிய அதி தீவிரப் புயலுக்குப் பிறகு, வங்கக் கடலில் தற்போது 2ஆவது அதி தீவிரப் புயலாக ஆம்பன் வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த ஆறு மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுவாகி, நாளை மாலை மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கிடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
ஆம்பன் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆம்பன் புயல் கரையைக் கடப்பதால் கடலோரப் பகுதிகளில் வாழும் மூன்று லட்சம் மக்களை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளதாகவும்; அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஊக்குவிப்பு முதல் வேலைவாய்ப்பு வரை