ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத்தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் இணையச் சேவை முடக்கம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது.
இதனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், இணையதளம் வாயிலாக கருத்துகளை வெளியிவதற்கும், தொழில்-வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாப்பு உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், இணையச் சேவை முடக்கம் தொடர்பான அனைத்து உத்தரவுகளும் உடனடியாக மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜூன் 17ஆம் தேதிவரை 2ஜி இணையச் சேவை மட்டுமே வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல் அனைத்தும நடைமுறையில் இருக்கும் என்றும் மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பழைய ஸ்ரீநகரில் அமைந்துள்ள நாவா கடல் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை காரணமாக, ஸ்ரீநகரில் வழங்கப்பட்ட 2ஜி மொபைல் இணைய சேவைகள் மே 19 அன்று திரும்பப் பெறப்பட்டன.
நாவா கடலில் என்னும் இடத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: 122 டிகிரி கொதிக்கும் மணலில் சாப்பாத்திச் சுடலாம்! #EXCLUSIVE