முன்னாள் பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியை நிறுவியவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 95ஆவது பிறந்தநாள், அக்கட்சியின் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் லக்னோவிலுள்ள வாஜ்பாய் நினைவிடத்திற்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
1924ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி பிறந்த வாஜ்பாய் மூன்று முறை பிரதமராகியுள்ளார். பிரதமராகி ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்த காங்கிரஸ் கட்சியை சாராத முதல் பிரதமர் என்ற பெருமையும் வாஜ்பாய்க்கு உண்டு. லக்னோவிலிருந்து ஐந்து முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாஜ்பாய், 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி மறைந்தார். அவரது நினைவாக லக்னோவில் 25 அடி உயர சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்தச் சிலையின் கட்டுமானப் பணி நிறைவடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சிலையை இன்று திறந்து வைக்கவுள்ளார். மேலும், வாஜ்பாய் பெயரில் புதிதாக தொடங்கப்படவுள்ள மருத்துவ பல்கலைக்கழகத்திற்கும் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். இதற்காக லக்னோ முழுவதும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை'