மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அர்னாலாவில் நேற்றிரவு பயங்கரவாத தடுப்பு காவல் துறையினர் உள்ளூர் காவல் துறையினர் சேர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியிலிருந்த 23 பேரை விசாரித்தனர். அதில் அவர்களுக்கு மராத்தி தெரியாமல், தடுமாறி உளறியுள்ளனர். மேலும் விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளனர். தொடர்ந்து விசாரித்ததில், அவர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்த வங்கதேசத்தவர்கள் எனத் தெரிய வந்தது.
இதனையடுத்து ஒரு சிறுவன் உள்பட 23 வங்கதேசத்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், இது குறித்து இன்று காலை வழக்குப் பதிவு செய்தனர்.
முன்னதாக இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறிய பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாட்டவா்களை வெளியேற்றக் கோரி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனைத் தலைவா் ராஜ் தாக்கரே தலைமையில், அக்கட்சியின் பேரணி மும்பையில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...'ஏழு பேர் விடுதலை.... எங்களுக்கு அதிகாரம் இல்லை': தமிழ்நாடு அரசு