இது குறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் தில்பாக் சிங் திங்களன்று (ஜூன்8) செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் கடந்த இரண்டு நாள்களில், ஒன்பது ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அவந்திபோராவில் சிறுவர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்திய பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம். அங்கிருந்த சிறுவர்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களில், ஒன்பது பெரிய நடவடிக்கைகள் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்டன. இதில் ஆறு தளபதிகள் உள்பட 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். காலகோட் பகுதியில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.
இந்த ஊடுருவல் பாகிஸ்தானும் அதன் ஏஜென்ஸிகளும் பயங்கரவாதிகளுக்கு துணை போவதை காட்டுகிறது.
மே-28ஆம் தேதி ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதிகளிடமிருந்து 150 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் ஒரு மிகப்பெரிய தாக்கல் முறியடிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் 2018-19 மிகவும் வெற்றிகரமான ஆண்டாக திகழ்ந்தது. அந்த ஆண்டுகளில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.
பயங்கரவாதிகள் பெரும்பாலும் உள்ளூர் இளைஞர்களைத் தயார்படுத்த முயற்சிக்கிறார்கள். இதற்கிடையில் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை அம்மாநில மக்கள் பாராட்டுகின்றனர். மாநிலத்தில் பயங்கரவாத குழுக்களில் இணையும் இளைஞர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு டிஜிபி தில்பாக் சிங் கூறினார்.
இதையும் படிங்க: புல்வாமா கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார்? காவல் துறை விளக்கம்