இந்தியாவில் கரோனா பாதிப்பை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி 'ஜன் ஆந்தோலன்' என்ற விழிப்புணர்வு பரப்புரையை தொடங்கியுள்ளார். இந்த பரப்புரையை முன்னெடுத்து பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், சிறு கவனக்குறைவும் கோவிட்-19க்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கோவிட்-19 நிலவரம்
கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் கோவிட்-19 பாதிப்பை கணக்கிடும் அளவீடான டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் (பரிசோதனையில் பாதிப்பு உறுதியாகும் சதவிகிதம்) 8.52 விழுக்காடிலிருந்து 8.19ஆகக் குறைந்துள்ளது.
குறிப்பாக நாட்டின் 22 மாநிலங்களில் இந்த குறியீடானது 8.19 விழுக்காட்டை விட குறைவாகவே உள்ளது. நாட்டின் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் அளவை விட அதிகளவில் பரிசோதனை மேற்கொள்கின்றன. 140 என்ற இலக்கை உலக சுகாதார அமைப்பு வைத்துள்ள நிலையில், இந்தியாவில் 865 என்ற இலக்கில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதையும் படிங்க: டெல்லி - பெங்களூரு: விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்...!