மேற்கு வங்கத்தில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, ஆளும் கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸில் அக்கட்சி தலைவர் மம்தா அதிரடி மாற்றங்களை செய்துவருகிறார். 21 உறுப்பினர்கள் கொண்ட மாநில ஒருங்கிணைப்பு குழுவை அவர் அமைத்துள்ளார். இதனை கண்காணிக்க 7 உறுப்பினர்கள் கொண்ட மற்றொரு குழவையும் அமைத்துள்ளார். மேலும், மாவட்ட தலைமையில் அதிரடி மாற்றங்களை செய்துவருகிறார்.
ஆம்பன் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக நடந்துகொள்ளும் கட்சியினருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தனக்கு நெருக்கமாக உள்ளவர்களை மட்டுமே 7 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் நியமித்துள்ளார்.
1977ஆம் ஆண்டு முதல் இடதுசாரி கூட்டணி மாநிலத்தில் ஆட்சி செய்துவந்த நிலையில், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. பின்னர், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்றதன் மூலம் இரண்டாவது முறையாக மம்தா முதலமைச்சராக பதவியேற்றார்.
இதையும் படிங்க: அற்புதமான ஆற்றல் அளிக்கும் 9 உணவுகள்!