கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்திலுள்ள பவகாடா தாலுகாவில் 2005ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். நக்சல் தலைவர் சகேத் ராஜன் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக நடந்த இத்தாக்குதலில், ஆறு கர்நாடக மாநில ரிசர்வ் காவல்துறையினர் (கே.எஸ்.ஆர்.பி) உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் வரவராவ், கடார் ஆகிய இருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக அரசு மேற்கொண்ட மேல்முறையீடு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தாக்குதல் தொடர்பாக தெலுங்கு இலக்கிய எழுத்தாளர் வரவராவ் இன்று கர்நாடகவிலுள்ள, பவகாடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார்.